Sunday, December 8, 2013

உலகில் காணும் காட்சி யாவும் கவிதைக் கோலம் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

29 comments:

  1. காணும் காட்சி கவிதையாய் பிறப்பது படைப்பவனின் திறமையால்... அருமையான வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. //இதை உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே//

    உணர்ந்து கொண்டவர்கள் மன்னர் என்றால் இப்படி உணர்ந்ததை அழகாக எழுதும் உங்களை கவியுலக சக்கரவர்த்தி என அழைக்கலாம்தானே? tha.ma 2

    ReplyDelete
  3. மழையை தடவி மகிழ்ந்த அருவி//

    அருமையான வரிகள் குரு....உங்கள் கவிதையை படித்தாலே கவிதை எழுத வருதே....!

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    வானக் கடலில் பறவை ஒன்று
    சிறகை விரித்து நீந்தும்-அதைக்
    காண மனதில் பொங்கும் மகிழ்வு

    என்ன வரிகள் ஐயா... மனதை நெருடிய வரிகள்...கவிச்
    சக்கர வர்த்தியே... இன்னும் பல கவிகள் எழுதுவாயாக. எங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. “உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே“ - இதை
    உணர்ந்து சொன்ன கவிதை பார்த்து
    உள்ளம் நெகிழ்ந்து போனேன்.

    ReplyDelete
  6. வணக்கம்
    த.ம.வாக்கு-4


    -நன்றி-
    -அன்புடன்-
    ரூபன்-

    ReplyDelete
  7. காண்பவை எல்லாம் அழகே
    என்ற உள்ளுணர்வு கவியாக
    உருவெடுக்க கருவாக அமைகின்றது
    என்பது உண்மையே ஐயா..

    ReplyDelete
  8. அருமையான வரிகள் த ம

    ReplyDelete
  9. அருமையான வரிகள்....

    ரசித்தேன்.

    த.ம. 7

    ReplyDelete
  10. கவிதை இத்தனை எளிமையாக வருகிறதே!

    ReplyDelete
  11. உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  12. கண்ணில் கண்ட காட்சி தன்னை
    கவிதை ஆக்கித் தந்தீர்- இதை
    எண்ணில் இன்பம் எல்லை மீற
    இதயம் தன்னில் வந்தீர்!

    ReplyDelete
  13. ''..உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே..''
    Eniya vaalththu..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  14. அருமையான வரிகள்... த.ம..9

    ReplyDelete
  15. கவிதைக்கான கருக்கள் சுமந்து சொன்ன கவிதை அற்புதம்!

    எத்தனை லாவகமாய்ச் சொற்கள் உங்களிடம் வந்து
    என்னையும் ஏற்றுக்கொள் என்று மண்டியிட்டனவோ!

    மிகவும் ரசித்தேன் ஐயா!.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இயற்கையில் எல்லாம் இருந்தும் கலா ரசிகனால் மட்டுமே ரசிக்க முடியும் ,மற்றவர்களுக்கு உங்கள் ஆக்கம்தான் ரசிக்கவைக்கும் !
    த.ம 1 1

    ReplyDelete
  17. ஆகா...! உருகி விட்டேன் ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. முந்தைய பதிவுகளில் அழகு கொஞ்சுகிறதே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இயற்கையை ரசிக்கும் மனங்களில் எந்நாளும் தோன்றும் உணர்வில்
    பிறப்பது தான் கவிதை என்று சொன்ன அருமையான கருத்திற்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா .

    ReplyDelete
  20. பாடலைப் படிக்கும் போதே அதன் மெட் ஜோராக உள்ளது. கவிதை மன்னருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. கவிதை அருவியாய் கொட்டியிருக்கிறது. படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  22. காண்பவை எல்லாம் கவிதையாய் பளிச்சிடுகிறது அய்யா...

    ReplyDelete
  23. ஆஹா ஆஹா..! அருமை அருமை....!

    இயற்கையும் இன்று தான் பிறந்த பயனை அடைந்திருக்குமோ. அழகிய வனங்கள் மிக திருமகன் வார்த்தையில் உலவிய பெருமிதம் கண்டிருக்குமோ. கங்கையா யமுனையா இப்படி பிரவாகிக்கிறதே.
    நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  24. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே// உண்மை உண்மை ..
    அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  25. நீங்கள் கவிதை மன்னன் தான் இரமணி ஐயா.

    ReplyDelete

  26. உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே//ஆம் உண்மை

    ReplyDelete
  27. கவிதை மண் +அவருக்கு கனிவான வணக்கங்கள்.
    வலைதள மண்ணை ஆளும் கவி மன்னன்......
    எல்லாம் இன்ப மயம்.......... நாம் தாம் கவனிப்பதில்லை...........

    ReplyDelete
  28. கவிஞனுக்கு உலகில் காணும் ஒவ்வொன்றும் ஒரு தலைப்பு! என்பதனை திறம்படச் சொன்னீர்கள்

    ReplyDelete