Sunday, January 26, 2014

கண்ணாடி பிம்பக் கறை

தேடித் தேடி ஓடியும்
கிடைக்காத பொருள்
வெறுமையை விதைத்துப் போக

வேண்டாம் வேண்டாம் என
ஒதுக்கத் தொடரும் பொருள்
சலிப்பைத் தந்து போக

அளவாகக் தேட
அளவாகக் கிடைத்த பொருள்
உண்மை மதிப்பில் இருக்க

தேடாதே இருக்க
தானாக மடிவிழுந்த பொருள்
சுய மதிப்பிழந்து தவிக்க

பொருளுக்கென தனியான
மதிப்பேதும் இல்லையெனத்
தெளிவு கொள்கிறேன் நான்

கண்ணாடி பிம்பத்தில்
கறைதுடைக்கும் மடமையை
தவிர்க்கத் துவங்குகிறேன் நான்

30 comments:

  1. யாம் பெற்ற தெளிவு பெறுக இவ்வையகம் என்று பகிர்ந்தமைக்கு நன்றி !
    த .ம 1

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் உண்மை தான்... முடித்த விதம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பொருளுக்கென தனி மதிப்பேதும் இல்லை என்பதை எங்களுக்கும் தெளிவு படுத்திய வரிகள் சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
  4. //கண்ணாடி பிம்பத்தில்
    கறைதுடைக்கும் மடமையை
    தவிர்க்கத் துவங்குகிறேன் நான்// மிக அருமை ஐயா!

    ReplyDelete
  5. பொருளுக்கென தனியான
    மதிப்பேதும் இல்லையெனத்
    தெளிவு கொள்கிறேன் நான்//

    அருமை.
    தெளிவு கிடைத்து விட்டது .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பொருளுக்கு இல்லை ஒரு பொருள் என்பதனை நன்றாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  7. // கண்ணாடி பிம்பத்தில்
    கறைதுடைக்கும் மடமையை
    தவிர்க்கத் துவங்குகிறேன் நான்//
    ஆஹா அமர்க்களம்!

    ReplyDelete
  8. கண்ணாடி பிம்பத்தில்
    கறைதுடைக்கும் மடமையை//

    சும்மாவா உங்களை நான் குரு"ன்னு சொன்னேன் ! செமையான பிரதிபலிப்பு கவிதை...!

    ReplyDelete
  9. கண்ணாடி பிம்பத்தில் கறை துடைப்பது ...ஆஹா...!

    ReplyDelete
  10. ஐயய்யோ! அப்படியானால் ஞானி யாகி விட்டீர்களா? இனிமேல் வலைப்பூ எழுதமாட்டீர்களா? எங்களோடெல்லாம் பேசமாட்டீர்களா?

    ReplyDelete
  11. Chellappa Yagyaswamy//

    கவனமாக தவிர்க்கத் துவங்கியிருக்கிறேன்
    எனத்தானே சொல்லியுள்ளேன்
    அதற்குள் என்னை
    காவியணியச் சொன்னால் எப்படி ?

    ReplyDelete
  12. ''..கண்ணாடி பிம்பத்தில்
    கறைதுடைக்கும் மடமையை
    தவிர்க்கத் துவங்குகிறேன் ...'''
    முழு மனிதனாகலாம்.
    சிந்தனை மிக நன்று!
    உலகே கலாச்சாரப்பூங்கா, தமிழ்ப்பூங்கா ஆகிவிடும்!
    இனிய வாழ்த்தும் பாராட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. படித்தறிவை விட
    பட்டறிவு
    அதாவது, பட்டுத் தெளிந்த அறிவு
    வலிமையானதே!
    தங்கள்
    "தெளிவு கொள்கிறேன்" என்பதிலிருந்து
    புரிந்து கொள்ளமுடிகிறது.

    ReplyDelete
  14. .G.M Balasubramaniam

    .....ஆஹா...

    இந்த இரண்டெழுத்துப் பாராட்டு
    மிகச் சிறப்பாக அல்லவா இருக்கிறது

    ReplyDelete
  15. நல்ல வித்தியாசமான் சிந்தனை " கண்ணாடி பிம்பத்தில் கறை துடைப்பது ."

    ReplyDelete
  16. கண்ணாடி பிம்பத்தில் கறைதுடைக்கும் மடமை! அருமையான உவமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  17. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பொருள் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டேன் இறுதியில் சொல்லிய உவமை.. மிக நன்று. வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. கண்ணாடிபிம்பத்தில் கறைதுடைக்கும் மடமையை உடைத்தெறியலாம்/

    ReplyDelete

  19. தேடாதே இருக்க
    தானாக மடிவிழுந்த பொருள்
    சுய மதிப்பிழந்து தவிக்க
    உண்மை உண்மை !
    அது சரி எல்லாம் நன்றாகவே உள்ளது.

    அப்போ இனி கண்ணாடியில் முகம் பார்க்க போவதில்லையா. கறை படிந்த கண்ணாடியில் முகம் பார்த்தால் நன்றாகவா இருக்கும்.
    அப்புறம் முகத்தில் கறை என்று டாக்டரிடம் போகாமல் இருந்தால் சரி தான்.

    நன்றி தொடர வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
  20. கண்ணாடி பிம்பத்தில்
    கறைதுடைக்கும் மடமையை
    தவிர்க்கத் துவங்குகிறேன் நான்

    நல்ல கருத்து! வேண்டுமானால் சில நேரங்களில் கண்ணாடியில் படிந்திருக்கும்
    கறையைத்தான் துடைக்க முடியும்!

    ReplyDelete
  21. அருமை...பொருளுக்கு மதிப்பு இல்லை.... தெளிவாகி விட்டது..

    ReplyDelete
  22. மிக அருமை அய்யா.. த.ம 17

    ReplyDelete
  23. அருமையான வரிகள்! உண்மையை உறைக்கும் பளிச் வரிகள்! நிலையில்லா பொருளின் பின்னால் அலைந்துதானே மனிதன் மன அமைதி தொலைத்து நிற்கின்றான்! தானுமே நிலையாற்றவன் என்பதை தெரிந்தும், உணராமலேயே!!!
    த.ம.

    ReplyDelete
  24. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete