Wednesday, January 29, 2014

காலம் கடக்க நினைப்பது

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது 
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான் 
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான் 
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது 
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

33 comments:

  1. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - என்பது இதுதானோ? கவிஞருக்கு நன்றி!

    ReplyDelete
  2. தகுதிப்படுத்திக்கொள்ல என்ன செய்யனும்ன்னும் நீங்களே சொல்லிடுங்க!

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    மனித வாழ்க்கையில் எத்தனை விடயங்களை கடக்க
    வேண்டி யுள்ளது... என்பதை தங்களின் கவிதையின் வழி அறிந்தேன். உண்மையான வரிவடிவம். வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நல்ல படைப்பு.......வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. எதை கவிதையாக
    பகிர்வது பகிராதது என்பது பற்றி
    கவிஞர் ரமணி சாருக்குதான் தெரியும்
    அது போல மொக்கை பதிவு
    போடுவது போடாதது என்பது பற்றி
    மதுரைத்தமிழனுக்குதான் தெரியும்.
    பூரிக்கட்டையால்
    அடிப்பது அடிக்காதது எனப்து பற்றி
    அ.உ வின் மனைவிக்குதான் தெரியும்

    ReplyDelete
  7. இக்கரையிலிருந்து சிந்தனை அழகு.

    ReplyDelete
  8. காலந் தாண்டி நிற்க நினைப்பதுதான் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... நிதர்சனம் பேசிய வரிகள் அருமை.

    ReplyDelete
  9. ///காலம் கடக்க நினைப்பதுதான்
    தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்///
    அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  10. முதலில் நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனது உன்னத வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. காலம் கடந்து நிற்க நம்மைகாலத்தோடு இயைந்து போக சொல்லும் இதை அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  12. இனியும் கடந்துபோகும்

    ReplyDelete
  13. அமர்க்களமான அளிப்பு! மிகச்சிறந்த இடுகை!
    14th line : "மிதக்க நினைப்பது?"

    ReplyDelete
  14. சரி செய்துவிட்டேன்
    மிக்க நன்றி ஜனா

    ReplyDelete
  15. அருமையான கருத்துச் செறிந்த கவிதைகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. முயற்சி, தன்னம்பிக்கையோடு போராடுதல் போன்றவைகளை சிம்பிளாக சொல்லி உணர்த்தி விட்டீர்கள் குரு...அசத்தல் கவிதை...!

    ReplyDelete
  17. தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்//

    நன்றாக சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தகுதியானவன் காலம் கடந்து நிற்பான் என்பதை புரிந்து கொண்டேன் !
    த ம 1 6

    ReplyDelete
  19. தங்கள் சிந்தனை ஒவ்வொன்றும் வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  20. காலம் கரைந்தாலும்
    காலம் கடந்தாலும்
    நாம்
    கருத்திற்கொள்ள வேண்டியவை
    இவை!

    ReplyDelete
  21. காலத்துக்கு எல்லாம் தெரியும். நமக்குத்தான் எதுவும் தெரிவதில்லை.

    ReplyDelete
  22. எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. கையில் கடிகாரம் கட்டிக்கொண்டவன் காலத்தையே கையில் கட்டிக்கொண்டதாக நினைத்தானாம்.

    ReplyDelete
  23. அருமையான சிந்தனை.... த.ம +1

    ReplyDelete
  24. காலம் கடக்க நினைப்பதுதான்
    தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்

    ஆம் உண்மையான வாழ்வியல் கருத்து!!!!

    அற்புதமான கவிதை ....வரிகளும்...!!

    இதுவும் கடந்து போகும் என்ற கதை நினைவுக்கு வந்தது!..

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  25. சிறப்பான கவிதை. ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete

  26. வணக்கம்!

    காலம் படிக்கும் கவிதையைத் தந்துள்ளீா்
    கோலத் தமிழைக் குவித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  27. உங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

    ReplyDelete