Tuesday, March 18, 2014

மூடுபனி ( 2 )

முதல்  பதிவிற்கு
http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_16.html

விருதுநகரில் இப்படிப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள
ஹோட்டல் இருப்பது  குறித்த ஆச்சரியமா (அப்போது )
அல்லது சோமுவுக்கு எப்படி இவ்வளவு
செல்வாக்கு வந்ததுஎன்பதனால் வந்தக் குழப்பமா
எனத் தெரியவில்லை
என்னால் வெகு நேரம் எதுவும் பேச முடியவில்லை

சோமு இயல்பாக  இருந்தார்.தனது சூட்கேஸில் இருந்து
காவி வேட்டியை எடுத்துஅணிந்தபடி டிரைவரிடம்
"எனக்கு காலையில் ஆறு மணிக்கு மண்டபம் போக
வண்டி வந்தால் போதும்.முதலாளியிடம் சொல்லி விடு
வேறு எதுவும் வேண்டுமென்றால் போன் செய்கிறேன்
நீ போகலாம் : என்றார்

டிரைவர் மீண்டும் ஒருமுறை அவருக்கு பௌவ்யமாக
வணக்கம் செலுத்திவிட்டு போனால் போகிறதென்று
எனக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்

எனக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை
இருந்தாலும் ஆனது ஆகட்டும் என "இந்த
டிரைவரையும் காரையும் பார்க்க மிகப் பெரிய
முதலாளியுடையது எனப் புரிகிறது
அவர் யார் ? உங்களுக்கு எப்படி இவர் பழக்கம் "
என பொதுவான ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன்

இதுபோன்ற ஆழம் பார்க்க கேட்கிற கேள்விகளை
அதிகம் கேட்டு பழகியதாலா அல்லது நான் நிச்சயம்
இப்படிக் கேட்பேன் என எதிர்பார்த்ததாலா
எனத் தெரியவில்லை
சோமு என் கேள்வியைக் கேட்டதாகவே
 காட்டிக் கொள்ளாது
"மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க
நான் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்"
எனச் சொன்னபடிஒரு காவித் துண்டை எடுத்து
தோளில் போட்டபடி குளியறை நோக்கி
 நடக்கத் துவங்கினார்

நானும் என்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டு
முகம் கைகால் கால் கழுவி என்னை
ஆசுவாஸப் படுத்திக் கொண்டு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்எனப் படுக்கையில் சாய்கையில்
சோமு குளித்து முடித்து உடலெங்கும்
 திருநீர் தரித்தபடிசிவப்பழமாய் வந்தார்

அவரது கலைந்த நீண்ட முடி ,தாடி கழுத்தில் மின்னிய
அந்த ஸ்படிக மாலை காவி வேட்டி இடுப்பில் கட்டிய
காவித்துண்டு,அந்தச் சூழலை வித்தியாசமானதாக
மாற்றிக் கொண்டிருந்தது

ஷெல்பில் இருந்த ஸூட்கேசை மிகப் பௌயமாக
கீழே சுவரோரம் வைத்துத் திறந்து அதன் முன்
சம்மணமிட்டபடி அமர்ந்து உள்ளிருந்து ஒவ்வொரு
பூசை சாமான்களாக வெளியிலெடுத்து வைத்து
மந்திர உச்சாடனாம் செய்ய ஆரம்பித்தார்

நேரம் நேரம் ஆக ஆக கூடிய மந்திரச் சப்தமும்
அவர் குரலில் இருந்த கம்பீரமும்.
முறுக்கேறிய அவர் உடல் முன் பின்னாக
ஆடத் துவங்கிய ஆட்டமும் என்னை மிக லேசாக
பயம் கொள்ளச் செய்தது

நான் என்னையறியாது கட்டிலைவிட்டு இறங்கி
சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொண்டேன்

அந்த ஏ ஸி அறை,இரவு மணி பதினொன்று
இதுவரை பார்த்திராத முறையில் வித்தியாசமாக
எனது உறவினர் சோமு, மணிச் சத்தம்
மந்திரச் சப்தம், தூக்கக் கலக்கம் என்னை
என்னவோ செய்து கொண்டிருந்தது

ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்ட
பலியாட்டின் நினைவு என்னுள் மிக லேசாகப் பரவ
உடல் மிக லேசாக நடுங்கத் துவங்கியது

இடது கையில் வேகமாக மணியாட்டியபடி
வலது கையில் பெட்டிக்கு சூடம் காட்டியபடி
மிகச் சப்தமாக மந்திரம்  சொல்லிக்கொண்டிருந்தவர்
சட்டென என் பக்கம் திரும்பி என்னை
தலைமுதல் கால் வரை ஒருமுறை பார்த்துவிட்டு
சட்டென  என் கண்களை உற்றுப் பார்த்தார்

அந்த விரிந்த கண்களிருந்து ஏதோ ஒன்று
என் கண் வழியே என்னுள் வேகமாக இறங்க்குவதைப்
போலத் தெரிய மெல்ல மெல்ல நான்
என் நினைவுகளை இழக்கத் துவங்கினேன்

(தொடரும் )

61 comments:

  1. என்னங்க இது...? வியப்பு மேல் வியப்பாக இருக்கிறது...!

    ReplyDelete
  2. ஒவ்வோர் பகுதியை முடிக்கும் போதும் மர்மத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள் ஐயா.

    ReplyDelete
  3. மூடு பனி அடர்த்தியாகி மர்மம் அதிகரித்துவிட்டதே.. தாங்களும் சுழலில் அகப்பட்டுவிட்டீர்களோ..!

    ReplyDelete
  4. உங்களையும் மெஸ்மரைஸ் பண்ணிட்டாரா ?
    த ம 4

    ReplyDelete
  5. //ஆழம் பார்க்க கேட்கிற கேள்விகளை
    அதிகம் கேட்டு பழகியதாலா அல்லது நான் நிச்சயம்
    இப்படிக் கேட்பேன் என எதிர்பார்த்ததாலா
    எனத் தெரியவில்லை
    சோமு என் கேள்வியைக் கேட்டதாகவே
    காட்டிக் கொள்ளாது// ஆழம் நீங்க பார்க்கிறதா எனக்கு தெரியல.... அவர் உங்க கேள்வியில் இருந்து உங்களை ஆழம் பார்ப்பதாக தெரிகிறது எனக்கு....

    //அவர் உடல் முன் பின்னாக
    ஆடத் துவங்கிய ஆட்டமும் என்னை மிக லேசாக
    பயம் கொள்ளச் செய்தது

    நான் என்னையறியாது கட்டிலைவிட்டு இறங்கி
    சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொண்டேன்//
    சாதாரணமா ஒரு மனிதர் இருப்பதற்கும் இதுப்போன்ற நிகழ்வுகளில் பார்ப்பதற்கும் கண்டிப்பா பயம் இருக்கத்தான் செய்யும் அதுவும் நள்ளிரவு வேறு... படிக்கும்போது எனக்கும் பயமாகவே இருக்கிறது...

    //ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்ட
    பலியாட்டின் நினைவு என்னுள் மிக லேசாகப் பரவ
    உடல் மிக லேசாக நடுங்கத் துவங்கியது//
    அடுத்து எப்படி தப்பிப்பது என்று யோசிச்சிருப்பீங்களே...

    //அந்த விரிந்த கண்களிருந்து ஏதோ ஒன்று
    என் கண் வழியே என்னுள் வேகமாக இறங்க்குவதைப்
    போலத் தெரிய மெல்ல மெல்ல நான்
    என் நினைவுகளை இழக்கத் துவங்கினேன்//

    இனி அவர் கேள்விகள் கேட்பார்.. நீங்க பதில் சொல்லவேண்டி வரும்னு நினைக்கிறேன் ரமணி சார்.


    வித்தியாசமான பகிர்வு.. ரொம்ப நாளாச்சே ரமணி சார் வலைப்பூ பக்கம் போய் என்று பார்க்க வந்தால் இப்படியா பயமுறுத்துவது? :) நல்லா எழுதி இருக்கீங்க ரமணி சார்.. அடுத்து என்னாச்சோ ரமணி சார்?

    த.ம.5

    ReplyDelete
  6. சிறந்த பகிர்வு
    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  7. இதுதான் மெஸ்மெரிஸம் என்பதோ?

    ReplyDelete
  8. உண்மையாவே தலை சுற்றுது !

    ReplyDelete
  9. வயிற்றைக் கலக்குதே சந்திரமுகி படம் பார்ப்பது போல் ஓர் உணர்வு எமக்குள்ளும் :))) தொடரட்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா .8

    ReplyDelete
  10. ரொம்பத்தான் மிரட்டிவிட்டாரோ? சுவாரஸ்யம் கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  11. இப்போது திகில் கதையா? பாராட்டுக்கள். தொடர்கிறேன்

    ReplyDelete
  12. .ஆ! அப்புறம்??

    தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கதையா, நிஜமனுபவமா! ஹிப்னடைஸ் செய்து விட்டாரா? உடல் பொருள் ஆனந்தி நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  14. தொடர்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  15. அட..... அப்புறம் என்ன ஆச்சு... புதிரா இருக்கே...

    ReplyDelete
  16. மர்ம நாவல்கள் படித்து அதிக நாட்களாகிவிட்டது....இது உங்கள் மூலம் மீண்டும் நிறைவேறும் என நினைக்கிறேன்...தொடருங்கள் ஐயா....நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  17. சஸ்பென்ஸ் தாங்கலையே ....

    ReplyDelete
  18. ஆஹா....திகில் ஸ்டோரி ஆரம்பம் ஆகிருச்சே...!

    ReplyDelete
  19. ஆஹா....திகில் ஸ்டோரி ஆரம்பிச்சிருச்சு...

    ReplyDelete
  20. திகில் கதைக்கேற்ற வேகமான நடை அருமை

    ReplyDelete
  21. என்னவாயிற்று? நாங்களும் கதிகலங்கிப் போய் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  22. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரே சஞ்சலமாக ....! தொடர்கிறேன்..!
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  23. அடுத்து என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த அருமையான திகில் கதை! படம் போல காட்சி மனதி விரிகின்றது வாசிக்கும் போது! அருமையான எழுத்து நடை!

    த.ம.

    ReplyDelete
  24. சுவாரசியமான கதை. நாள்தோறும் எழுதினால் நல்லது.

    ReplyDelete
  25. அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பை தந்து விட்டது கதை மூடுபனி எப்போது விலகும் படிக்க ஆவலாக காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  26. முடிந்தால் இதையும் கொஞ்சம் பாருங்கள் ஐயா .
    http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_20.html

    ReplyDelete
  27. அம்மனோ சாமியோ! அத்தையோ! மாமியோ! – பாடல் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  28. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Tamizhmuhil Prakasam //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    \தொடர்தலுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Bagawanjee KA //

    ஏறக்குறைய அப்ப்டித்தான்

    ReplyDelete
  33. Manjubashini Sampathkumar //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    விரிவான பின்னூட்டட்த்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  34. Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு
    வரவேற்கிறேன்.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. விமலன் said...//

    இதுதான் மெஸ்மெரிஸம் என்பதோ?

    ஏறக்குறைய அப்ப்டித்தான்

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. புலவர் இராமாநுசம் said...//

    உண்மையாவே தலை சுற்றுது !//
    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. அம்பாளடியாள் வலைத்தளம் said..//
    .
    வயிற்றைக் கலக்குதே சந்திரமுகி படம் பார்ப்பது போல் ஓர் உணர்வு எமக்குள்ளும் :)//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. தளிர்’ சுரேஷ் said...//
    ரொம்பத்தான் மிரட்டிவிட்டாரோ? சுவாரஸ்யம் கூடுகிறது! தொடர்கிறேன்//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. G.M Balasubramaniam said...
    இப்போது திகில் கதையா? பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மாதேவி said...//
    .ஆ! அப்புறம்??
    தொடரட்டும் வாழ்த்துக்கள்.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. ஸ்ரீராம். said...//
    கதையா, நிஜமனுபவமா! ஹிப்னடைஸ் செய்து விட்டாரா? உடல் பொருள் ஆனந்தி நினைவுக்கு வருகிறது.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. அருணா செல்வம் said...//
    தொடர்கிறேன் இரமணி ஐயா.///
    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. இஆரா said...//
    மர்ம நாவல்கள் படித்து அதிக நாட்களாகிவிட்டது....இது உங்கள் மூலம் மீண்டும் நிறைவேறும் என நினைக்கிறேன்..//.

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. rajalakshmi paramasivam said...//

    சஸ்பென்ஸ் தாங்கலையே .//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. MANO நாஞ்சில் மனோ said..//
    .
    ஆஹா....திகில் ஸ்டோரி ஆரம்பம் ஆகிருச்சே...!//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. Nagendra Bharathi said...//

    திகில் கதைக்கேற்ற வேகமான நடை அருமை//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. கரந்தை ஜெயக்குமார் //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  50. Iniya said..//.
    அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரே சஞ்சலமாக ....! தொடர்கிறேன்..!
    வாழ்த்துக்கள்...//!

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. Thulasidharan V Thillaiakathu said...//
    அடுத்து என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த அருமையான திகில் கதை! படம் போல காட்சி மனதி விரிகின்றது வாசிக்கும் போது! அருமையான எழுத்து நடை!


    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. Chellappa Yagyaswamy said...//
    சுவாரசியமான கதை. நாள்தோறும் எழுதினால் நல்லது.//

    முயற்சிக்கிறேன்
    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. கோமதி அரசு said...
    அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பை தந்து விட்டது கதை மூடுபனி எப்போது விலகும் படிக்க ஆவலாக காத்து இருக்கிறேன்.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. அம்பாளடியாள் வலைத்தளம் //

    பார்த்துப் படித்து ரசித்து
    பின்னூட்டமும் இட்டுவிட்டேன்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மிக்க நன்றி


    ReplyDelete
  55. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. அய்யோ எதாவது மர்மக்கலை பயின்றவரோ ? என்ன ஆச்சோ தெரியலையே..

    ReplyDelete
  57. Sasi Kala said...//
    அய்யோ எதாவது மர்மக்கலை பயின்றவரோ ? என்ன ஆச்சோ தெரியலையே..//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. சோமு செய்வது ஏதோ மெஸ்மரிசம் போன்று இருக்கிறது.

    ReplyDelete