Wednesday, March 19, 2014

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...


கடந்த பத்தாண்டு காலமாக நான் அரிமா
சங்கத்தில் உறுப்பினராக பொருளாளராக,செயலாளராக
மாவட்டத் தலைவராக பல்வேறு பொறுப்புக்களை
வகித்து மீண்டும் நண்பர்களின் வேண்டுகோளைத் தவிர்க்க
முடியாமல் இவ்வாண்டும் ஒரு சங்கத்தில்
தலைவராக பொறுப்பேற்று உள்ளேன்

பிறக்கும் முன்னே நமக்கென அனைத்தையும்
மிகத் தயாராக வைத்திருந்து வரவேற்ற இந்தச்
சமூகத்திற்கு நம்மாலான எதையேனும் நிச்சயம்
செய்ய வேண்டும் என உறுதி கொண்ட நண்பர்களின்
துணையோடு பல்வேறு நலத்திட்டங்களை 
அவை வேண்டி நிற்போருக்குச்செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்

சேமிப்பே முதல் செலவாக இருக்கவேண்டும் என
சேமிப்புக் குறித்து அறிந்தவர்கள் சொல்வதைப்போல
தானம் போக மீதமே தனக்கு என்கிற கொள்கையும்

நம் மூலம் கொடுத்தால் நிச்சயம் பகிர்ந்தளிக்கப்படும்
எனத்தான் ஆண்டவன் நமக்கு சகல சௌபாக்கியங்களும்
வழங்கியிருக்கிறான் என்பதில் அசையாத 
நம்பிக்கையும் கொண்ட பலரும் 
இந்த இயக்கத்தில் இணைந்திருப்பது 
அதிக மகிழ்வளிப்பதாகவும்
அதிக ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது

அந்த வகையில் நேற்று தனது 34 வது  திருமண நாளைக்
கொண்டாடிய திரு நகரைச் சேர்ந்த  
அரிமா,மோகன் உஷா தம்பதியினர் தங்கள்
இல்லத்திற்கு அருகில் இருந்த ஆதரவற்ற
பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான 
இரவு டின்னர் ஏற்பாடு செய்து அதையும்
தங்கள் கைகளால் உணவு பரிமாறி தங்கள் 
மகிழ்ச்சியை இர்ட்டிப்பாக்கிக் கொண்டனர்

அன்று இரவு எங்கள் சங்கத்தில் நாங்கள் ஏற்பாடு
செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் பேசுகையில்
"உழைத்துச் சாப்பிடுவதைவிட கொடுத்துச் சாப்பிடுவது
எத்தனை மகோன்னமானது என இன்று எங்களுக்குப்
புரிந்தது.

இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள்  இல்ல
சுப நிகழ்வுகளில் அந்தப் பள்ளிக் குழந்தைகளையும்
எங்கள் குடும்ப அங்கத்தினர்களாக நிச்சயம் ஏற்று
விருந்தளித்து மகிழ்வோம் "என உறுதி சொன்னது
அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டும் செய்தியாக
இருந்தது

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -அவன்
யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்-இல்லை
ஊருக்காகக் கொடுத்தான் " 

என்பதைஉணர்ந்த ,அனைவருக்கும் உணர்த்திய தம்பதிகள்
பல்லாண்டு பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ
எல்லாம் வல்லவனைப் பிரார்த்தித்துக் கொள்வோமாக
கைப்பட  பரிமாறுவதில்
களிப்பு கொள்ளும் தம்பதிகள்  


குழந்தைகளின்  வாழ்த்து 



40 comments:

  1. தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கும் இறைவன் மென்மேலும் இது போன்ற வாய்ப்புகளைஅள்ளி அள்ளி வழங்க வேண்டும் அத்தோடு இந்தத் தம்பதியினரின் நன் மனதிற்கு நீடூழி வாழ நானும் மனதார வாழ்த்துகின்றேன் ஐயா .

    ReplyDelete
  2. நல்ல சேவை.
    தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகின்றோம்.

    ReplyDelete
  4. அரிமா ரமணி அவர்களே ,அரிய,பெரிய செயல்களை செய்ய வாழ்த்துக்கள் !
    த ம 5

    ReplyDelete
  5. என்ன தானம் செய்தாலும் கிட்டாத மகிழ்ச்சி, அன்னதானம் செய்யும்போது கிட்டுகிறது என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை. அது பொய்யாகாது. அரிமா சங்கத்தினர் பொதுவாகவே ஆடம்பரச் செலவுகளுக்குப் பேர் போனவர்கள் என்றாலும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள் என்பது வரவேற்க்கத்தக்கது. தங்கள் தொடர்ந்த தலைமையின்கீழ் மேலும் பல நற்செயல்கள் விளைந்திடட்டும் என்று வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  6. அருமையானதொரு சேவை! தங்கள் பொறுப்புகளும், சேவையும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உழைத்துப் சாப்பிடுவதிலும் இனிமை
    கொடுத்துச் சாப்பிடுவதுதான்

    உண்மைதான் ஐயா.
    தானத்தில் சிறந்தது அன்னதானமல்லவா

    ReplyDelete
  8. அந்தத் தம்பதிக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். உன்னத சேவைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்களுக்கும்,தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப ..... பணிகளும் சேவையும் தொடரட்டும் ஐயா.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. திருச்சியில் இருந்தபோது மகளிர் அரிமாசங்கத்தின் காரியதரிசியாக என் மனைவி இருந்தார். பல்வேறு நல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் அவர் முகத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி இருக்கும். ஆனால் மூதாட்டியர்களைக் காண்வும் உதவவும் சென்று வரும்போது துக்கமும் இருக்கும். பெரும்பாலான அரிமா சங்கத்தினர் அதை தங்கள் வியாபாரத்துக்கும் செல்வாக்குக்கும் உபயோகப் படுத்துகின்றனரோ என்னும் சந்தேகமுண்டு.

    ReplyDelete
  12. சிறப்பான சேவை.... உங்களுக்கும் தம்பதிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அம்பாளடியாள் வலைத்தளம் //

    வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. Chellappa Yagyaswamy said...
    என்ன தானம் செய்தாலும் கிட்டாத மகிழ்ச்சி, அன்னதானம் செய்யும்போது கிட்டுகிறது என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை. அது பொய்யாகாது.//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. Chellappa Yagyaswamy //

    அரிமா சங்கத்தினர் பொதுவாகவே ஆடம்பரச் செலவுகளுக்குப் பேர் போனவர்கள் //


    தங்கள் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி
    பொதுப்படையான கருத்து அப்படித்தான் உள்ளது

    இந்த இயக்கத்தில் சேருகிறவர்கள் அனைவரும்
    தொண்டையும் தோழமையையும் பிரதான விஷயங்களாகக்
    கொள்கிறார்கள்

    .மிகச் சிறப்பாகத் தொண்டு செய்ய
    தோழமை அவசியத் தேவையாக இருக்கிறது

    தோழமைக்கு, இதில் அங்கத்தினர் ஆகிறவர்கள் எல்லாம்
    மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கொஞ்சம்
    சராசரி நிலையைத் தாண்டியவர்கள் என்பதால்
    எதிலும் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்

    அதுவும் அவர்கள் சொந்தச் செலவில்...
    அப்படி ஒரு அபிப்பிராயம் இருப்பதால் சில
    நன்மைகளும் இருக்கிறது

    ReplyDelete
  18. Chellappa Yagyaswamy said...

    ...என்றாலும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள் என்பது வரவேற்க்கத்தக்கது. தங்கள் தொடர்ந்த தலைமையின்கீழ் மேலும் பல நற்செயல்கள் விளைந்திடட்டும் என்று வாழ்த்துகிறேன்!//

    வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Thulasidharan V Thillaiakathu //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  20. கரந்தை ஜெயக்குமார் said...//

    உழைத்துப் சாப்பிடுவதிலும் இனிமை
    கொடுத்துச் சாப்பிடுவதுதான்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. rajalakshmi paramasivam said...//
    அந்தத் தம்பதிக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். உன்னத சேவைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.//


    தங்கள் வாழ்த்தினை அந்தத் தம்பதிகளுக்குத்
    தெரிவித்து விட்டேன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Mythily kasthuri rengan said...//

    உங்களுக்கும்,தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. இஆரா said...//

    'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப ..... பணிகளும் சேவையும் தொடரட்டும் ஐயா.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. G.M Balasubramaniam said...
    திருச்சியில் இருந்தபோது மகளிர் அரிமாசங்கத்தின் காரியதரிசியாக என் மனைவி இருந்தார். பல்வேறு நல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் அவர் முகத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி இருக்கும். ஆனால் மூதாட்டியர்களைக் காண்வும் உதவவும் சென்று வரும்போது துக்கமும் இருக்கும்.//

    சேவையில் கிடைக்கும் நிறைவு
    அனுபவித்தால்தான் தெரியும்
    எனப் புரிந்து, புரியப் பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. G.M Balasubramaniam said...//

    பெரும்பாலான அரிமா சங்கத்தினர் அதை தங்கள் வியாபாரத்துக்கும் செல்வாக்குக்கும் உபயோகப் படுத்துகின்றனரோ என்னும் சந்தேகமுண்டு.//

    நீங்கள் குறிப்பீடிருப்பதைப் போல
    வியாபார விருத்திக்கும் செல்வாக்குப் பெருக்கத்திற்கும்
    என அதில் இணைபவர்களும் இருக்கிறார்கள்
    ஆனால் அவர்கள் பெரும்பாலானவர்கள் இல்லை
    சிலர் அப்படி இருக்கிறார்கள்
    அப்படி அவர்கள் இருப்பது இயக்கத்திற்கும்
    பலவகைகளில் நன்மையாகத்தான் இருக்கிறது

    தங்கள் வரவுக்கும் வழக்கம்போல்
    வெளிப்படையான விமர்சனத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் said...//

    சிறப்பான சேவை.... உங்களுக்கும் தம்பதிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. சிவகுமாரன் said...//

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்//
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. Bagawanjee KA said...//

    அரிமா ரமணி அவர்களே ,அரிய,பெரிய செயல்களை செய்ய வாழ்த்துக்கள் !//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. மாதேவி said...//

    வாழ்த்துகின்றோம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. சிவகுமாரன் said...//

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்//தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  32. கே. பி. ஜனா... said...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  34. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  35. லயன் A.மோஹன் மற்றும் லயன் S. உஷா தம்பதியர் உவந்தளிக்கும் பற்பல சேவை விருந்துகளில் இதுவும் ஒன்று. லயன்ஸ் மாவட்டம் 324 B 3 ன் வட்டாரத்தலைவராக லயன் மோஹன் அவர்கள் இந்த வருடம் பல சேவைகளை செய்திருந்தாலும், தாங்களால் தான் அவர் வள்ளல் குணம் பற்றிய தகவல் ஊரரிய, பாரரிய இனிய ஒரு வலைப்பதிவாகியிருக்கிறது. லயன் மோகன் அவர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் லயன்ஸ் சங்கத்தின் அங்கத்தினர் என்பது எங்கள் சங்கத்திற்குப் பெருமை.

    லயன்ஸ் இயக்கம் பற்றி மக்கள் கொண்டுள்ள பல கருத்துக்கள் பின்னூட்டமாக பதிவாகியிருப்பது இந்தப் பதிவின் சிறப்பு.

    லயன்ஸ் இயக்க விழாக்கள் ஆடம்பரமாக இருப்பது இந்த இயக்கத்தின் பெருமை. ஆடம்பர செலவு கூட எத்தனையோ மக்களுக்கு வாழ்வாதாரமாகி இருப்பதை கருத்தில் கொண்டால் ஆடம்பரங்கள் கூட சேவை திட்டங்கள் தான் என்ற உண்மை விளங்கும். இந்த வழி, இலவசங்களைக் காட்டிலும் சிறந்த வழி. இந்த ஆடம்பரங்களினால் எந்த ஒரு தனி மனிதனும் தனிப்பட்ட முறையில் புகழ் அடைவதில்லை என்பது இதன் சிறப்பு.

    லயன்ஸ் போன்ற இயக்கங்களில் நம் வாழ்நாளில் மூன்றுவருடமாவது செயல் பட்டால் வாழ்க்கை இன்னும் இன்னும் தெளிவாய்ப் புரியும்.
    இப்படிக்கு,
    லயன் Er.வெங்கட்.



    ReplyDelete

  36. VENKAT //

    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    நம்மிடையே மட்டும் நம் பெருமைகளைப்
    பேசிக் கொண்டிருப்பதைவிட வெளியில்
    பேசுவதே மக்கள் நம்மை எப்படிப் புரிந்திருக்கிறார்கள்
    என அறிய உதவும் என்பதால் என்னுடைய
    வலைப்பதிவில் இதைப் பதிவிட்டேன்

    இதன் மூலம் நாம் அறிந்து கொண்டது
    நாம் மிகச் சரியாக நாம் நினைப்பது போல்
    நம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே

    நம்முடைய சமூக சிந்தனையும்
    சமூக அக்கறையும் இன்னும் மிகச் சரியாக
    பெரும்பான்மையோரிடம் போய்ச் சேரவில்லை
    என்பது மட்டுமல்ல,
    மிகச் சரியாக
    தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுவும்தான்

    இனி தொடர்ந்து என் பதிவின் மூலமே
    நம் இயக்கம் குறித்து சில பதிவுகள்
    இடையிடையே வெளியிடலாம் என்கிற
    எண்ணம் உள்ளது

    மீண்டும் வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  37. நலத்திட்டங்களை நன்றாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
    உஷா தம்பதியினர் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  38. கோமதி அரசு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  40. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete