Friday, April 18, 2014

500 வது பதிவு

எனக்கே இது ஐநூறாவது பதிவென நினைவில்லை
பதிவுலக நண்பர்தான் ஃபோன் செய்து
"ஒரு சிறப்புப் பதிவு போடுங்களேன்  "என்றார்

வெகு தூரம் ஓடிவந்த பின் ஒரு சிறு நிழல் கிடைக்க
அதிலமர்ந்து வந்த பாதையைப் பார்ப்பது
ஒரு தனிச் சுகம்தான்.
அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான்
அந்தச் சுகம் அதிகம் புரிபடும்

98  நாடுகளில் 384 தொடர்பவர்களோடு
இரண்டு லட்சத்து முப்பதாயிரம்
 பக்கப் பார்வையாளர்களோடு
ஏறக்குறைய 23000 பின்னூட்டங்களோடு
இந்தப் பதிவுலகப் பயணம் தங்களைப் போன்ற
பதிவர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது

சிறப்பித்துச் சொல்லும்படியாக பதிவுகள் எதுவும்
எழுதவில்லையென்றாலும்
சிறப்பித்துச் சொல்லும்படியான
அதிகமான நண்பர்களைப் பெற்றதும்

ஓய்வு பெற்றப்பின் ஓய்ந்துவிடாமல் படிக்கவும்
மனதில் பட்டதைப் பகிர்வதன் மூலம் என்னைத்
தினமும் புதுப்பித்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பும்

தலைமுறை இடைவெளி அதிகப் பட்டுவிடாமல்
அனைவரின் மன நிலைகளை மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளவும்,இணைந்து கொள்ளும் லாவகமும்

இந்தப் பதிவுலகத் தொடர்பால் எனக்குக் கிடைத்த
அபூர்வ வரம்,அதீத சுகம் என்றால் அது மிகையான
வார்த்தை இல்லை

என் புலம்பலையும் ஒரு பொருட்டாகப் பாராட்டி
என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எனதருமை
பதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் எனது
மனமார்ந்த நன்றி

40 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  2. ஆஹா.... இந்த ஐநூறு, விரைவில் ஐயாயிரமாக மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  3. /// சிறப்பித்துச் சொல்லும்படியான
    அதிகமான நண்பர்களைப் பெற்றதும்... ///

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. இன்பம் என்றும் ஊற்றாக
    ஈற்றில் பகிர்வுகள் நாற்றாக
    என்றும் பசுமை குன்றாமல்
    ஏற்றம் கண்டு வாழியவே ....

    தங்கம் போன்றே மின்னிடும்
    தகமை நிறைந்த நற் கருத்தால்
    என்றும் இது போல் பல நூற்றை
    ஏட்டில் பத்தித்து வாழியவே ...

    அங்கம் முழுவதும் தமிழுக்கே
    அடிமை அடிமை என எண்ணும்
    தங்கத் தமிழன் உன்(றன் ) மனம் போல ஆக்கம்
    தளராதிங்கே ஒளிரட்டும் ...........

    என்றும் எதிலும் நேர்மைக்கே
    ஏற்றம் வருமுன் பகிர்வுகளால்
    நன்றே பணி செய் எந்நாளும்
    நாடும் மக்களும் போற்றிடவே ...

    இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  5. ஆயிரத்தில் சரிபாதி
    பதிவுகளைத் தந்திட்ட
    கவிஞருக்கு
    ஆயிரத்தை எட்டிட
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. 500 வது பதிவு வாழ்த்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி

    ReplyDelete
  7. 300ஐத் தொடுவதற்கே விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு 500ஐத் தொட்ட பின்னும் எளிமையாய் பயணிக்கும் நீங்கள் முன்னுதாரணம். உங்களின் பதிவுலகப் பயணம் வெற்றியுடன் என்றும் தொடர மகிழ்வான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. 500க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. #வெட்டவெளியில்
    கூடியிருந்த பக்தகோடிகைள் நோக்கி
    "கதவைத் திறவுங்கள்
    காற்று வரட்டும் " என
    கையுயர்த்தி அருளினார்
    காவி நித்யானந்தர்

    தனியைற்யில்
    ஆத்மார்த்த சீடரிடம்
    "கதவை மூடிப்போ
    ரஞ்சிதா இருக்கட்டும்"என
    ரகசியமாய் முனங்கினார்
    ஜாலி நித்ய ஆனந்தர்#
    இந்த கவிதையில் தொடங்கிய உங்கள் ஜாலி பயணம் இன்றோடு ஐந்நூறை தொட்டு இருப்பதில் இருந்து தெரிகிறது ...நீங்களும் ஜாலி நித்ய ஆனந்தர்தான் கவிதைகள் படைப்பதில் !
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
    த ம 7

    ReplyDelete
  10. சுருக்கமாகம் சுவாரசியமாகவும் உங்களுக்கென்ற தனி பாணியில் அமைந்திருப்பதே உங்கள் பதிவுகளின் சிறப்பு.. 500 பதிவுகள் என்பது சாதாரண விஷயமன்று. நீங்கள் எழுதுவதோடு மற்றவர்களயும் கருத்திட்டு ஊக்கப் படுத்தி இருக்கிறீர்கள்.
    உங்கள் கருத்க்க்கள் என்னைப் போன்ற பலரை தொடர்ந்து எழுத ஊக்கிவித்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் பதிவுப் பயணம். வாழ்த்துக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  11. ஐநூறாவது பதிவுக்கு
    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  12. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா... இன்னும் பல பதிவுகள் எழுதிட வேண்டும்....

    ReplyDelete
  14. மனம் நிறைந்த வாழ்த்துகள் ரமணி ஜி. உங்கள் பக்கத்தில் ஒவ்வொரு பதிவும் சிறப்பான பதிவு தான் .மேலும் பல பதிவுகள் எழுதிட வேண்டுகோள்......

    ReplyDelete
  15. வாழ்த்துகள் சார்.இன்னும் நிறைய பதிவு எழுத/

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ஐயா! என்ன ஒரு தன்னடக்கம் !
    மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  17. வெறும் எண்ணிக்கை அளவில் இல்லாமல் தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் வாசகர்களின் அடிமனம் வரை சென்று சிந்தனையை எழுப்புவதாகவே உள்ளன. எனவே தங்கள் பதிவுகளை எண்ணி தாங்கள் தயங்காமல் பெருமை கொள்ளலாம். தங்களைப் போன்றோரின் எழுத்துக்களை வாசிப்பதனாலேயே எங்கள் எண்ணங்களும் ஏற்றம் பெறுகின்றன என்பது உண்மை. ஐநூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரமணி சார். மேலும் பல சிறப்பான பதிவுகளால் வலையுலகில் வலம்வர இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மேலும் பல ஆயிரம் பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் பணியை....

    ReplyDelete
  20. வணக்கம்! மிக்க மகிழ்ச்சி ஐயா!
    நிறைகுடம் தளம்பாது என்பதற்கு நீங்களே உதாரணம்.
    நிற்காமல் ஓடுகிறீர்
    நினைத்ததையே அடைகின்றீர்
    வற்றாத ஊற்றுதனை
    வையாமல்(வய்யாமல்) வடிக்கின்றீர்
    பற்றாது என்றே பாசாங்கு செய்கின்றீர்
    கற்றாலும் கிட்டாத கலைசெல்வம் இது
    பொற்காசு தந்தாலும் பிறக்காத இச்செல்வம்
    பெற்று மேலும் மேலும் வளரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  21. 500ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா !!!
    தொடரட்டும் உங்கள் எழுத்து சேவை..

    ReplyDelete
  22. .வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஸார்!

    ReplyDelete
  23. உளங்கனிந்த வாழ்த்து! தொய்வின்றி தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  24. தலைமுறை இடைவெளி அதிகப் பட்டுவிடாமல்
    அனைவரின் மன நிலைகளை மிகச் சரியாகப்
    புரிந்து கொள்ளவும்,இணைந்து கொள்ளும் லாவகமும்//வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. ஐநூறாவது பதிவுக்கு
    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!

    மேலும் பல நூறுகள் வெளிவரட்டும்.

    விரைவில் 1000 ஆகட்டும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  26. 500 ப்திவுகள் என்பது சாதாரணமல்ல. எழுதும் உத்வேகம் உங்களை நடத்திவந்திருக்கிறது. குறை ஏதும் காணாமல் நிறைவொன்றையே கூறும் உங்கள் பாங்கு எனக்குப் பிடித்திருப்பது போல் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள். தொடரட்டும் அசராத எழுத்துப்பணி.

    ReplyDelete
  27. ஆஹா.... இந்த ஐநூறு, விரைவில் லட்சங்களில் தொடர் மனம் நிறைந்து வாழ்த்துக்கள் ஐயா.!

    ReplyDelete
  28. பதிவர் சந்திப்பில் தங்களோடு உரையாடிய மணித்துளிகள் மறக்க முடியாதவை ஐயா! உங்கள் நட்பு கிடைத்ததை பெருமையாக கூறீக்கொள்வேன்! ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள்!
    தொடரட்டும்
    எழுத்தோட்டம்!

    ReplyDelete
  30. வாழ்த்துகள் ரமணி சார் :) ஆயிரமாவது பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் சின்னப்பயல் :)

    ReplyDelete
  31. மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடரட்டும்

    ReplyDelete
  32. ஐநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் ரமணி ஸார்! ''ஓய்வு பெற்றபின் ஒய்ந்துவிடாமல் என்னைபுதுப்பித்துக் கொள்ளவும்......." நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே நூற்றுக்கு நூறு நிஜம்.
    இந்தப்பதிவே மிக நன்றாக இருக்கிறது.

    மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. ஐநூறாவது பதிவுக்கு
    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!
    துவக்கத்தின் உற்சாகத்துடன் தொடர வாழ்த்துக்கள். ..!

    ReplyDelete
  34. வணக்கம்!

    பதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்
    வாழ்த்துக்கள்!

    சின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி
    மின்னல் ஒளியேற்றி நன்குழைப்பாா்! - கன்னல்
    கவிபாடும் நம்மின் இரமணியார்! வாழ்க
    புவிபாடும் நற்புகழ் பூத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  35. 500 ஆவது பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! விரைவில் ஆயிரத்தை எட்ட வாழ்த்துகள்! தொடரட்டும் உங்களின் சீரிய எழுத்துப்பணி! நன்றி ஐயா!

    ReplyDelete
  36. தங்கள் சிந்தனைக் கவிதைகள் இன்னும் பல்லாயிரம் படைப்புகளாய் மலரட்டும்.

    500வது படைப்புக்கு வாழ்த்துக்கள் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  37. வாழ்த்த வயதில்லை.
    வணங்குகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் .கவிதைகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள். கவிதை பணிக்கு பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  39. ஊரில் இல்லை அதனால் தாமதமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete