Wednesday, April 16, 2014

பாம்பின் கால் அல்லது பண்டித ரகசியம்

எனது எழுத்தாளர் நண்பன்
அந்தக் கவிதை நூலை
என்னிடம் தந்து
"இதை மிகக் கவனமாய்ப்  படி
உன் எழுத்துக்கு நிச்சயம் இது உரம் சேர்க்கும் "
எனச் சொல்லிப்போனான்

நானும் அந்தக் கவிஞரை
அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆயினும்
அவர் கவிதைகளைப் படித்ததில்லை

ஆர்வமாய் நான்
கவிதை நூலை விரிக்க
ஆச்சரியம் என்னை
அள்ளிக் கொண்டு போனது

எழுத்துக்கள் அனைத்தும்
வார்த்தைகள் அனைத்தும்
தமிழில் இருந்தும்
அர்த்தம் மட்டும் விளங்கவே இல்லை

வாக்கியங்கள்
மிக நேர்த்தியாக
அடுக்கப்பட்டிருந்தும்
அவற்றிற்கான
தொடர்புகள் மட்டும் புரியவே இல்லை

மறுமுறை சந்தித்த நண்பன்
"கவிதைகள் எப்படி "என்றான்

"அற்புதம்  "என்றேன்

"எல்லோராலும் புரிந்து கொள்வது
மிக மிகக் கடினம்
என்னைப்போல் நீயும்
புரிந்து கொள்வாய் எனத் தெரியும்  " என்றான்

எனக்குப் பெருமையாய் இருந்தது
அவனுக்கும் இருந்திருக்கும்

இருவரும்
அவர் படிப்பு பட்டங்கள் குறித்து
அவரின் வளர்ப்பு இருப்பு குறித்து
அதிகம் பேசினோம்

அவர் கவிதைகள் குறித்து மட்டும்
கடைசிவரை
நல்ல வேளை
அவனும் பேசவில்லை
நானும் பேசவில்லை

32 comments:

  1. :))))))))))) ஆஹா இதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது ஒரு பேச்சுக்குச் சொன்ன அற்புதம் என்ற வார்த்தைக்குள் எதுவுமே இல்லை அப்படித்தானே ?..புரியாத ஒன்றைப்பற்றி எவ்வாறு விளக்கமளிப்பது ஒரு வேளை எங்களுக்கும் அற்புதம் என்று சொல்லி எஸ் ஆனா ஞாபகம்
    உண்டா ஐயா ?......:))))))

    ReplyDelete
  2. இப்படித்தான் கவிதைன்னு சொல்லி பலபேர் கொலையா கொன்னுகிட்டு இருக்காங்க !

    ReplyDelete
  3. தமிழ் மணத்தில்இணைக்க முடியவில்லை ,விரைவில் இணைக்கவும் !

    ReplyDelete
  4. நான் இணைத்து லைக்கும் போட்டு விட்டேன் நீங்கள் போட வேண்டியது தான் பாக்கி போடுங்கள் சகோ .

    ReplyDelete
  5. அனைத்தினையும் அறிந்தவனாக காட்டிக் கொள்வதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உணர்வு என்பதனை தங்களின் கவிதை பட்டவர்த்தனமாக சொல்லாமல் சொல்கிறது . மிகவும் யதார்த்தமான உள்ளுணர்வினை வெளிப்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete
  6. //மறுமுறை சந்தித்த நண்பன் "கவிதைகள் எப்படி "என்றான்

    "அற்புதம் " என்றேன்

    "எல்லோராலும் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம்
    என்னைப்போல் நீயும் புரிந்து கொள்வாய் எனத் தெரியும் " என்றான்

    எனக்குப் பெருமையாய் இருந்தது அவனுக்கும் இருந்திருக்கும்//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    அற்புதம் !! அற்புதம் !!

    இன்று பலர் வெளியிட்டுவரும் கவிதைகளுக்கும் எனக்கும் ‘அற்புதம்’ என்றே கருத்துச்சொல்லணும் என்ற ஆசையுண்டு. ஆனால் அதற்கும் நேரம் கிடைப்பது இல்லை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. புகழ்ந்து சொல்லாவிட்டாலும் சிறுமை படுத்தாமல் இருந்த உங்களின் பெருந்தன்மைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  8. அற்புதம்

    நல்லவேளை கவிதை பிழைத்தது..!

    ReplyDelete
  9. நிஜம் நிஜத்தை நிஜமாக
    நிஜமாக நிஜம் நிஜத்தை
    நிஜத்தை நிஜமாக நிஜம்
    நிஜமோ நிஜமே நிஜமா?
    நிஜம் நிஜம் நிஜம் - இது கவிஞர் ஆத்மாநாம் எழுதி, பழைய “கணையாழி“ இதழில் வெளிவந்த நீங்கள் சொல்வது போலும் “அற்புத“கவிதை!
    எந்த அளவிற்குப் புரியலையோ அந்த அளவிற்கு கவிதை கனமானதாம்! இவர்களை என்ன செய்ய? உண்மையை உரித்துப் போட்டுவிட்டீர்கள் அருமை

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா...

    வாசிப்பு மனிதனை மேன்மைப்படுத்தும் ஐயா...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  11. இப்படியும் சில கவிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    தமிழ் வாழட்டும்

    ReplyDelete
  12. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!

    ReplyDelete
  13. ''..கடைசிவரை
    நல்ல வேளை
    அவனும் பேசவில்லை
    நானும் பேசவில்லை...''
    இப்படி அனுபவங்கள் உண்டு நீங்கள் தெளிவாகச் சொன்னீர்கள்.
    பிரபல சினிமா கவிஞரின் கவிதைப்புத்தகம் வாங்கி வாசித்த போது கூட ஏண்டா இதை வாங்கினேன் எனும் உணர்வு கூட வந்தது.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. நன்றாகச் சொன்னீர்....!ஆனால் உங்கள் சாதுர்யம் எனக்கு வருவதில்லை. எழுதுவது எண்ணங்களைக் கடத்தவே. ஆகவே அது படிப்பவருக்குப் புரியவேண்டும். கவிதை என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. சந்தத்திற்காகவும் கவிதை என்று தெரியப் படுத்துவதற்காகவும் தேவையற்ற வார்த்தைகளைக் காணும்போது சில சமயங்களில் வாசிக்கும்போது என்னை அறியாமல் என் எண்ணத்தை தட்டச்சு செய்து விடுகிறேன். இன்னொன்றும் சொல்ல வேண்டும் abstract ஆக எழுதுவது மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவா ... புரிவதில்லை. இதையெல்லாம் நான் எழுதி இருக்கக் கூடாதோ என்னவோ.....!

    ReplyDelete
  15. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    ReplyDelete
  16. நானும் சில நேரங்களில் இப்படி புரியாத கவிதை படித்துவிட்டு, எனக்கு தான் போதவில்லையோ என்று கவலைப்பட்டதுண்டு! நல்ல சொன்னீங்க!

    ReplyDelete
  17. .அந்த கவிஞர் யாரு ஐயா? அந்த புத்தகம் பேரு என்ன? சொன்னீங்கன்னா முயற்சி செய்து பார்ப்பேன்.

    ReplyDelete
  18. கவிதைகள் மட்டுமல்ல. இவ்வாறான நிலைகளில் நான் பல கட்டுரைகளை படித்துள்ளேன். படித்து முடித்தபின்னர் கட்டுரையாளர் என்ன சொல்ல வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதில் அலங்கரமான சொல் மற்றும் சொற்றொடர்கள் அதிகமாகக் காணப்படும். நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  19. அடடா உண்மையை போட்டு இப்படி உடைச்சிட்டீங்களே
    கிண்டல்,நக்கல் , நையாண்டி இப்படி எதை வேணுமானா சொல்லலாம். சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது
    உங்க ஸ்டைலே தனிதான் ரமணிசார்

    ReplyDelete
  20. ஆஹா... அற்புதம்!!!

    இது உண்மையாய் சொன்னேன் இரமணி ஐயா.

    உங்கள் நண்பருக்கு நன்றி. அவரால் தானே பண்டித ரகசியத்தை அறிய முடிந்தது.

    ReplyDelete
  21. உண்மை சகோ. இந்தத் தொப்பி யாருக்கொ? அருமை. என் தளத்தில்:
    கந்தசாமியும் சுந்தரமும் - 02

    ReplyDelete
  22. இன்றைய கவிதை சார் உலகம் படும் பாட்டுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

    ReplyDelete
  23. அருமையாக சொன்னீர்கள்.

    ReplyDelete