Wednesday, April 30, 2014

சுதாரிப்பு சுப்ரமணி

கண்ணுக்கு மிகஅழகா
காதலிக்க வெகுஜோரா
பொண்ணுஒண்ணு பிடிச்சிப் புட்டேன்-இனிதான்
பிழைக்கவேலைப் பிடிக்கப் போறேன்

சமைப்பதற்கு மிகஎளிதா
இருக்குமாறு அண்டாகுண்டா
அமைப்பாக வாங்கிப் புட்டேன்-இனிதான்
சமைக்கவே பழகப்  போறேன்

நீந்துதலுக்கு ஏற்றதோதாய்
பார்ப்பதற்கும் கனஜோராய்
நீச்சலுடை எடுத்தே விட்டேன்-இனிதான்
நீர்தேடி  அலையப்  போறேன்

விசிலடிக்க நூறுபேரும்
மாலைபோட பத்துபேரும்
சரியாகப் பிடிச்சுப் புட்டேன்-இனிதான்
பேசிடவே பழகப் போறேன்

குர்தாவும் ஜோல்னாவும்
குறுந்தாடி இத்யாதி
கச்சிதமாத் தேத்திப் புட்டேன்-இனிதான்
கவியெழுதக் கற்கப் போறேன்

32 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    ஆகா...ஆகா... கவிதை நன்றாக உள்ளது... இனித்தானே அட்டகாசம்....உழைப்பாளி தினமன்று...
    மேதின வாழ்த்துக்கள் ஐயா

    என்பக்கம் கவியாக
    எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. முன் தயாரிப்புகள்
    முத்தாய் மிளிர்கின்றன...!

    ReplyDelete
  4. நான் ரெடி???/ நீங்க ரெடியானு கேக்கறாப்பல..முன் தயாரிப்பாளர்..ஹாஹா....அருமை முன் தயாரிப்பும் உங்கள் கவி நடையும் வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  5. விசிலடிக்க நூறுபேரும்
    மாலைபோட பத்துபேரும்
    சரியாகப் பிடிச்சுப் புட்டேன்-இனிதான்
    பேசிடவே பழகப் போறேன்

    ; நையாண்டி அருமை! இரசித்தேன் !

    ReplyDelete
  6. படிச்சு படிச்சு ரசித்து விட்டேன்... அடிச்சு பிடிச்சு ஓடி வந்துட்டேன்... இனிதான் பின்னூட்டம் போடணும்.

    ReplyDelete
  7. நன்று நன்று.
    உழைப்பாளர்தின வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. பொருள் பண்டமெல்லாம் வாங்கிப் புட்டேன்
    போகிற போக்கில் இனித்தான் வீடே கட்டப் போறன் :))))தொழிலாளர் தினத்தில் சிரித்து மகிழ வைத்த அருமையான நையாண்டிப் பகிர்வு மிகவும் ரசித்தேன் ஐயா வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. ///குர்தாவும் ஜோல்னாவும்
    குறுந்தாடி இத்யாதி
    கச்சிதமாத் தேத்திப் புட்டேன்-இனிதான்
    கவியெழுதத் துவங்கப் போறேன்//

    இதில் கடைசி வரி .......

    ’இனிதான் கவியெழுதக் கற்கப்போறேன்’
    என்று கூட இருக்கலாம்.

    தமிழர் திருநாளாம் ‘பொங்கல்’ என்பதை ’பொங்கள்’ என எழுதி தமிழ்க்கொலை செய்பவனெல்லாம் கவிஞன் எனச் சொல்லித் திரிகிறார்கள்.

    அனைவருக்கும் அருமையான சூடு கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. முன் யோசனை முத்தண்ணா.....

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ///குர்தாவும் ஜோல்னாவும்
    குறுந்தாடி இத்யாதி
    கச்சிதமாத் தேத்திப் புட்டேன்-இனிதான்
    கவியெழுதத் துவங்கப் போறேன்//

    இதில் கடைசி வரி .......
    இனிதான் கவியெழுதக் கற்கப்போறேன்’
    என்று கூட இருக்கலாம். //

    நீங்கள் சொன்னபடி திருத்தினால்தான்
    கவிதை மிகச் சரியானப் பொருள் பெறுகிறது
    திருத்திவிட்டேன்,மிக்க நன்றி

    ReplyDelete
  12. சுதாரிப்பு சுப்ரமணி சுட்டும்
    முன்னெடுப்புகள் எல்லாம்
    காதலைப் படிக்கவா
    காதலியைப் பிடிக்கவா
    நன்றே - எம்மை
    சிந்திக்க வைக்கிறதே!

    புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.

    ReplyDelete
  13. வணக்கம்.
    ஒவ்வொன்றுக்கும் பின்னர் செய்யும் வேலைகளை முன்பே செய்து முடித்து விட்ட சுப்ரமணியை அழகாக, அற்புதமாக உருவாக்கியிருக்கிறீர்கள் நகைச்சுவையுடன் ௯டிய படைப்பு! ரசித்துப் படித்தேன்.!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. சூப்பர் ஐயா . பலவேலைகளை இப்படித்தான் கற்கிறோம்

    ReplyDelete
  15. ஹா ஹா... எல்லா நையாண்டிகளும் சூப்பர்...

    ReplyDelete
  16. சிறப்பான நையாண்டிக் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நானும் இப்படி தாங்க இரமணி ஐயா.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அருணா செல்வம் said...////

    நானும் இப்படி தாங்க இரமணி ஐயா//

    .நீங்கள் அப்படி இல்லையென்பது
    எனக்குத் தெளிவாகத் தெரியும்
    காரணம் நான் தங்கள் படைப்புகளின்
    முன்வரிசை ரசிகன்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  20. காதலிக்க வெகுஜோரா
    பொண்ணுஒண்ணு பிடிச்சிப் புட்டேன்////வாழ்த்துக்கள்தமிழ் பெண்ணுக்குவாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. குர்தாவும் ஜோல்னாவும்
    குறுந்தாடி இத்யாதி
    கச்சிதமா ஏதுமில்லா
    கவிஞரே
    தங்களின் கவிதை
    அற்புதம்
    நன்றி

    ReplyDelete
  22. பாடல் வரிகள் போல் உள்ளது. முக்கியமானதை முதலில் செய்யாமல் தேவையானதற்கு முதலிடம் வழங்காது நேரத்தை இழப்போருக்கு ஏற்ற கவிதை

    ReplyDelete
  23. கவிதை வரிகள் அருமை ரமணி சார்.

    ReplyDelete
  24. #பொண்ணுஒண்ணு பிடிச்சிப் புட்டேன்#
    அந்த பெண்ணுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் !
    த ம +1

    ReplyDelete
  25. சுதாரிப்பு சுப்ரமணி, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, அலர்ட் ஆறுமுகம் – இவர்களெல்லாம் இன்னும் இருக்கிறார்கள்.
    த.ம.13

    ReplyDelete
  26. Super sir.... Appo ellam ready illaiyaa ?! Ini ellam jeyame !

    ReplyDelete