Saturday, May 3, 2014

முரண்

இன்றைய நிலையில்-----
அமைதியான சூழலுக்கு
அன்றாடம் போராடும்படியானதும்
எளிமையாக இருப்பதற்கு
அதிக செல்வச் செழிப்பு வேண்டும்படியானதும்
சும்மா இருப்பதற்கு
அதிகப் பிரயத்தனப்படும்படியானதும்
வாழ்வாங்கு வாழ அன்றாடம்
செத்துச் செத்துப் பிழைக்கும்படியானதும்

முரணெனப்பட்டாலும்
துயரெனப்பட்டாலும்
வாழ்வினை
அர்த்தப்படுத்துவதும்
அழகுப்படுத்துவதும்
அதுவாகத்தானே இருக்கிறது ?

சாரமற்ற வாழ்வில் ருசிகூட்டவும்
சோம்பலை ஒழித்து வேகம் கூட்டவும்
வெறுமையான வாழ்வினைச் சுவாரஸ்யப்படுத்தவும்
ஒருவகையில் முரண் என்பதுவும்
தேவையாகத்தானே இருக்கிறது ?

23 comments:

  1. அமைதியான சூழலுக்கே போராடும் படியாகத்தான் உள்ளது
    அருமை ஐயா
    முரண்
    அருமை

    ReplyDelete
  2. சுவாரஸ்ய முரண்!

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. சாரமற்ற வாழ்வில் ருசிகூட்டவும்
    சோம்பலை ஒழித்து வேகம் கூட்டவும்
    வெறுமையான வாழ்வினைச் சுவாரஸ்யப்படுத்தவும் முரண் என்பது தேவை...தேவை......
    நன்ற..நன்று...இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. ஆம் அய்யா . அவ்வப்போது முரண்களும் தேவைப் படத்தான் செய்கின்றன

    ReplyDelete
  6. இந்த முரணும் இனிமையாய் இருக்கே ...
    கொலை செய்தாவது கௌரவமாய் வாழணும்னு 'கௌரவக் கொலை ' செய்யும் முரணைத்தான்என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !
    த ம 7

    ReplyDelete
  7. சிலரின் நடத்தைகள் நமக்கும் முரணாகத்தான் தெரிகிறது, அதே போல நாமும் அவர்களுக்கு முரணாக இருக்கிறோம் இல்லையா ?

    ReplyDelete
  8. ஆமாங்கய்யா ..

    ReplyDelete
  9. முரண் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு என்பதை அழகாகச் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  10. எளிமையாக இருப்பதற்கு
    அதிக செல்வச் செழிப்பு வேண்டும்படியானதும்

    முரண்சுவை..??!!

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா.

    சரியாகச் சொன்னீர்கள்.... பகிர்வுக்கு நன்றி ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. உண்மை முற்றிலும் உண்மை ஐயா தங்களின் கருத்தினை நான் மிகவும்
    வரவேற்கின்றேன் .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. இன்றைய சூழலின் முரணை தெளிவாக சொன்னது கவிதை! அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  14. //வாழ்வினை
    அர்த்தப்படுத்துவதும்
    அழகுப்படுத்துவதும்
    அதுவாகத்தானே இருக்கிறது ?//அற்புதமாக சொல்லி இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.த ம 9

    ReplyDelete
  15. முரண்படவில்லை ஐயா! உண்மைதான்! நன்றி!

    ReplyDelete
  16. முரண் இன்றி வாழ்வு இல்லை.

    ReplyDelete
  17. முரண் - அதிகமாக யோசிக்கத் துர்ண்டுகிறது இரமணி ஐயா.

    ReplyDelete
  18. முரண் இருந்தால் தான் ஸ்வாரசியம்......

    ReplyDelete

  19. முரண்களால் சூழ்ந்ததே வாழ்க்கை.

    ReplyDelete