Saturday, May 31, 2014

காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

மொழியின்றி ஒலிவாழக் கூடும்
ஒலியின்றி மொழிவாழத் தகுமோ ?
நினைவின்றி மனம்வாழக் கூடும்-உன்
நினைவின்றி நான்வாழத் தகுமோ ?

ஊரின்றி வழிசெல்லக் கூடும்
வழியின்றி ஊரிருக்கத் தகுமோ
நானின்றி நீயிருக்கக் கூடும்-இங்கு
நீயின்றி நானிருக்கத் தகுமோ ?

பயிரின்றி நீரிருக்கக் கூடும்
நீரின்றி பயிர்வாழத் தகுமோ ?
உழைப்பின்றி செல்வமதுவும் கூடும்-உன்
துணையின்றி மகிழ்ந்திருத்தல் தகுமோ ?

காடின்றி மழைபெய்யக் கூடும்
மழையின்றி காடிருக்கத் தகுமோ ?
கூடின்றி குயிலிருகக் கூடும்-உன்
காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

24 comments:

  1. அருமை ஐயா... ஒன்றை ஒன்று சார்ந்தே...

    ReplyDelete
  2. சார்ந்தியங்கும் தத்துவம் கவிதையாக..

    ReplyDelete
  3. "ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா... இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலை மாறுமா..."

    :))))

    ReplyDelete
  4. #நானின்றி நீயிருக்கக் கூடும்-இங்கு
    நீயின்றி நானிருக்கத் தகுமோ ?#
    இதற்கு காதலி கூறிய பதில் ?))
    த ம 4

    ReplyDelete
  5. "காடின்றி மழைபெய்யக் கூடும்
    மழையின்றி காடிருக்கத் தகுமோ ?
    கூடின்றி குயிலிருகக் கூடும்-உன்
    காதலின்றி கவிபிறக்கத் தகுமோ?" என்ற
    அருமையான சிந்தனையை - எவராலும்
    மறக்கத்தான் இயலுமோ!

    ReplyDelete
  6. அருமையான இவ் வரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    ஐயா .இன்று என் வலையில் தந்தையைப் போற்றிப் பாடியுள்ளேன்
    தங்களையும் சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றேன்.மிக்க நன்றி ரமணி ஐயா .

    ReplyDelete
  7. ஒன்றை ஒன்று சார்ந்திருத்தலே இறைவனின் படைப்பின் அற்புதம். அதனை எளிமையாய், அழகாய் வெளிப்படுத்தியமை அருமை!

    நன்றி அய்யா சிறப்பான பகிர்விற்கு!
    http://www.krishnaalaya.com
    http://www.atchayakrishna.in/
    http://atchayavinkrishnalaya.blogspot.in/

    ReplyDelete
  8. ஒன்றில்லாமல்
    மற்றொன்று
    உருவாகுமா

    அருமை
    அருமை
    ஐயா

    ReplyDelete
  9. ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் சார்பு நிலை தத்துவம்.

    ReplyDelete

  10. ''..உழைப்பின்றி செல்வமதுவும் கூடும்-உன்
    துணையின்றி மகிழ்ந்திருத்தல் தகுமோ ?..''

    ஒன்றையொன்று பின்னிப் பிணையும் வாழ்வு தான்.
    நல்ல வரிகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. ஆஹா..
    கலக்கிட்டீங்க அய்யா..

    ReplyDelete
  12. “காதலின்றிக் கவிபிறக்கத் தகுமோ ? “

    கவி பிறந்தாலும் அது தகாது தான் போல.
    அருமை இரமணி ஐயா.

    ReplyDelete
  13. காதல் வந்தால் கவிதையும் வந்து விடுவது காதலின் சக்தியை காட்டுகிறது

    ReplyDelete
  14. ஒன்றிலிருந்து ஒன்று! ஒன்றுக்காக ஒன்று!ஒன்றோடு ஒன்று! என்பார் கண்ணதாசன்! அருமையான வரிகள்! நன்றி ஐயா!

    ReplyDelete
  15. அருமை அருமை ! ஒன்றில்லாமல் ஒன்றில்லையல்லவா உண்மை உண்மை நன்றி!
    வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  16. ஒன்றைச்சார்ந்து ஒன்று என்பது சரியே ஆனால் கவிதையில் வரும் பல “தகுமா” க்களுக்கு தகும் என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. காதலின்றி கவி பிறக்கலாகாது தான்...சிறப்பான கவி அய்யா..

    ReplyDelete
  19. அருமை....

    காதலின்றி கவி பிறக்காது! அட.... அதான் எனக்கு கவிதையே வரலையோ! :)

    ReplyDelete
  20. அட... அருமை... அசத்திட்டீங்க. நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com

    ReplyDelete