Monday, June 2, 2014

முரண் சுவை

படித்தவன் பாடம் நடத்த
படிக்காதவன்
பள்ளிக்கூடம் நடத்துகிறான்

பக்தியுள்ளவன் கோவிலைச் சுற்ற
பகுத்தறிவுவாதியோ
கோவிலையே சுருட்டுகிறான்

தொண்டன் இழந்து சாவியாக
தலைவனோ
சேர்த்துத் தியாகியாகிறான்

காந்தி நாட்டுக்குத் தன்னைத்தர
அரசியல்வாதியோ
காந்தி நோட்டுக்கு தன்னைத் தருகிறான்

இப்படி எழுதவும் கேட்கவும்
முரண்கள்
சுவையாகத்தான் இருக்கிறன

யதார்த்தத்தில் அவைகள்
அச்சமூட்டிப் போயினும்
அசிங்கப்படுத்திப் போயினும்....

29 comments:

  1. பணம் இருப்பவர் மருத்துவமனை கட்டி, படித்த மருத்துவரை அங்கு சம்பளத்துக்கு வைக்கிறார்! :)))

    ReplyDelete
  2. சுற்றுவதும் சுருட்டுவதும் தேவை இல்லாத வேலைதான் !
    த ம 3

    ReplyDelete
  3. அய்யா,
    வணக்கம். முரண் சுவைக்கிறது.
    நன்றி!

    ReplyDelete
  4. பணம் பணம்... அனைத்தும் பணம்...

    ReplyDelete
  5. இப்படி எழுதவும் கேட்கவும் முரண்கள் சுவையாகத்தான் இருக்கின்றன ............

    காரசாரமான மிக்ஸரில் சற்றே ஜீனி கலந்தது போல.

    ReplyDelete
  6. ''..இப்படி எழுதவும் கேட்கவும்
    முரண்கள்
    சுவையாகத்தான் இருக்கிறன...''
    This is true...
    Nanry.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    எல்லாத்துக்கும் காரணம் ஆசை...ஆசை...ஆசை..பணம் பணம்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.
    எல்லாத்துக்கும் காரணம் ஆசை...ஆசை.. பணம்..பணம். மிக அருமையாகசொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. கொலையும் கொள்ளையும்
    கொண்டவன், கண்டான்
    கல்விச் சாலை...

    ReplyDelete
  10. முரண், உங்கள் சிந்தனையில் மிக அழகாக வெளி வந்திருக்கிறது..பாராட்டுக்கள்

    ReplyDelete

  11. வயிறு நிறைய வேண்டுமென்று ஏழை நினைக்கிறான்.
    நிறைந்த வயிறு குறைய பணக்காரன் நினைக்கிறான்

    கல்யாணம் ஆனவனை பார்த்து ஆகாதவன் பொறாமை கொள்கிறான்
    கல்யாணம் ஆகாதவனை பார்த்து ஆனவன் பொறாமை கொள்கிறான்

    ReplyDelete

  12. குடிப்பவன் குடிக்காதவனை பார்த்து கிண்டல் செய்கிறான்
    குடிக்காதவன் குடித்தவனை பார்த்து கிண்டல் செய்கிறான்

    குடிக்காதவன் நிறைய சந்தோஷத்தை இழப்பதாக குடித்தவன் நினைக்கிறான்
    குடிப்பவன் நிறைய சந்தோஷத்தை இழப்பதாக குடிக்காதவன் நினைக்கிறான்

    ReplyDelete
  13. இப்படி எழுதவும் கேட்கவும் மட்டும்
    முரண்கள் சுவையாகத்தான் இருக்கிறன.... இரமணி ஐயா.

    ReplyDelete
  14. காந்தி எங்கே இவையெல்லாம் சரி இல்லைன்னு சொல்லிருவாரோன்னுதான் காந்தியையே காசுலே அச்சடிச்சுட்டாங்க. இப்ப அவரும் கூட்டுன்னு ஆகிப்போச்சு:(

    ReplyDelete
  15. இன்றைய நடைமுறை
    தங்கள் கவிதையில்
    நன்றி ஐயா
    தம 6

    ReplyDelete
  16. அவரவர் தாம் கொண்ட இலக்குகளுக்குத் தகுந்தவாறே
    தத்தம் செயல்களையும் அமைத்துக்கொள்கின்றனர்.
    தாம் எங்கே எப்படி செயல்பட்டால் அவர்களுக்குப் புரியும் உலக
    இன்பத்தினை அனுபவிக்கலாம் என்று
    உலகம் கூறிய அறத்தை ஒதுக்கி,
    பொருளை மட்டும் பொன்னாக எண்ணி,
    அதை முன்னே நிறுத்தி,
    முற்றிலும் அதிலே கண்ணாக இருக்கின்றனர்.


    பல்லக்கில் அமர்ந்து செல்பவனுக்கும்
    பல்லக்கினைத் தூக்கிச் செல்பவனுக்கும்
    ஏன் நாம் இதை செய்கிறோம் என்று
    தோன்றுமா என்ன?
    நாம் தான் அதற்கான பொருளை வள்ளுவத்தில்
    தேடுகிறோம். மன ஆறுதல் பெறுகிறோம்.

    ஐ.க்யூ ஐம்பது நபர்களிடம்
    ஐ. க்யூ நூறு நூற்று நாற்பது நபர்கள்
    அடிமை தொழில் செய்வது வெள்ளிடை மலை.
    இதுதான் வாழ்க்கையின் நடை முறை.
    சோனியாவின் கட்டளைகளுக்கு
    மனமுவந்து தானே
    மன்மோகன் செயல்பட்டார் .
    இது அவர்களுடைய சாய்ஸ்


    சுப்பு தாத்தா.

    ReplyDelete

  17. எழுதவும் கேட்கவும்
    சுவையாகத்தான் இருக்கும்
    முரண்கள்

    யதார்த்தத்தில்
    அச்சமூட்டி
    அசிங்கப்படுத்தி
    கஷ்டப்படுத்துவதை
    உணர்ந்தாவது இருக்கிறோமா..!

    ReplyDelete
  18. அருமையாகச் சொன்னீர்கள் ரமணி ஐயா ! சில சமையம் இவர்களைப் பாக்கும் போது எரிச்சலாகவும் வருகிறதே என் செய்வோம் .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் ரமணி ஐயா .த.ம .7

    ReplyDelete
  19. "காந்தி நாட்டுக்குத் தன்னைத்தர
    அரசியல்வாதியோ
    காந்தி நோட்டுக்கு தன்னைத் தருகிறான்" என்ற
    எடுத்துக்காட்டு ஒன்றே போதும்
    நடப்புநிலைய எடுத்துக்காட்ட...

    ReplyDelete
  20. Life is a bundle of contradictions Well said.

    ReplyDelete
  21. முரண்கள் இனித்தாலும் முரண்பாடாகத்தான் உள்ளது! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. முரண் பட்ட கவிதையாயினும் முத்தானதே....
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  23. முரண்கள் சில நேரம் சுவை சுமந்தே.சில நேரம் மட்டுமே/

    ReplyDelete

  24. வணக்கம்

    அரண்சுவை போன்றே அளித்த கவிதை
    முரண்சுவை ஊட்டும் மொழிந்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  25. காந்தி நாட்டுக்குத் தன்னைத்தர
    அரசியல்வாதியோ
    காந்தி நோட்டுக்கு தன்னைத் தருகிறான்//

    சத்தியமான வார்த்தைகள்! முரண்கள்தானே வாழ்க்கை! முரண்கள் இல்லையென்றால் நம்மால் எழுத முடியுமா? வாழ்வே சலிப்பாகி விடுமோ?!

    ReplyDelete
  26. ஆம். இதுதான் யதார்த்தம்.

    ReplyDelete
  27. யதார்த்தம்... முரண்களிலேயே வாழப் பழகிவிட்டோம்....

    ReplyDelete