Sunday, July 27, 2014

துரோகம் ( 11 )

மிக மிக வேகமாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த
சுப்புப்பாட்டி சட்டென ஒரு நீண்ட பெருமூச்சை
விட்டுச் சிறிது நேரம் மௌனமானார்

இப்படியானால் நிச்சயம் ஏதோ ஒரு அழுத்தமான
பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் என்பது
எங்களுக்கும் பழகிப் போயிருந்ததால் நாங்களும்
அவராக தொடரட்டும் என மௌனம் காத்தோம்

எதிர்பார்த்தபடி மீண்டும் சம நிலைக்கு வந்த
சுப்புப்பாட்டி கதையைத் தொடர ஆரம்பித்தார்.

"சில முக்கிய நிகழ்வுகள் சிலரை முன்னிலைப்படுத்தும்
அதைப்போலவே சிலரால்தான் சில நிகழ்வுகள்
முன்னிலைப்படுத்தப்படும்னு பெரியவா சொல்வா.

ராமாயணத்திலே கைகேகியும் பாரதத்தில் சகுனியும்
இல்லையானா கதை சுவாரஸ்யப்படுமா என்ன ?

இங்கே இந்த மீனா விஷயத்திலே சுந்தரமையர்
இல்லையாட்டி இது விஷயம் யாருக்கும் எதுவும்
நிச்சயம் தெரியாமலேயே போயிருக்கும்

அன்று காலையில் அவர் வந்ததும் கூட ஒருவேளை
பாலமீனாம்பிகையின் வழிகாட்டுதலால் கூட
இருக்கலாமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி
தோணுவதுண்டு

அதிகாலைப் பூஜைக்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு
வரவேண்டிய காசி ஐயர் கோவிலிருந்து வீட்டிற்குப்
போறதும் இந்த நேரம் குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருக்கிற மீனாஅவங்க அப்பா கூட
இருக்கிறதும் சுந்தரமையருக்கு இதிலே ஏதோ
விஷயம் இருக்குன்னு பட்டிருக்கு

சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா
கேட்கவா வேணும்னு
கிராமத்திலே ஒரு பழமொழி சொல்லுவா
அதை மாதிரி எங்கேடா வம்பு கிடைக்கும்னு அலையிற
பிரகிருதி இந்த சுப்பையர்.சும்மா இருப்பாரா ?

வழக்கம்போல பிரத்தட்சிணமா சுத்தி முறைப்படி
போகிற பொறுமை அவருக்கில்லை.ஏற்கெனவே
சன்னதி நீரோடையச் சரி செய்யப்போகிற விஷயம்
எல்லோரையும் போல அவருக்கும் தெரியும்கிறதுனாலே
சட்டென நேராகவே அம்பாள் சன்னதிக்குப்
போயிருக்காருடி

அவருக்கு அந்த சாரப்பலகையைப் பார்த்ததும்
அதிகச் சந்தேகம்.யாரும் சன்னதியில் இல்லாதது
அவருக்கு ரொம்ப வசதியாகப் போயிருக்கு
சட்டென பலகையைத் தூக்கிப்பார்த்தா பெரிய பள்ளம்
அபிஷேக நீர் போனா பள்ளம் விழ வாய்ப்பிருக்கு
ஆனா இவ்வளவு பெரிய பள்ளத்திற்கு
நிச்சயம் வாய்ப்பில்லையேன்னு அவருக்கு சட்டென
ஒரு சந்தேகம்.நிச்சயம் உள்ளே இருந்து ஒரு
கனமான பொருளை எடுத்திருக்கா.அதை மூட
அதிக மண் தேவைப்பட்டதாலே நேரம் இல்லாததாலே
பலகையை வைச்சு டெம்பரவரி வேலை என்னவோ
பண்ணி வைச்சிருக்கான்னு அவருக்குப் புரிஞ்சு போச்சுடி

காசி அய்யர் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டுப்
போனதை வைச்சு நிச்சயம் என்னவோ நடந்திருக்கு
அதுவும் போக அவர் போகையிலே கையில் ஏதும்
இல்லாததுனாலே அப்படி எதை எடுத்திருந்தாலும்
நிச்சயம் அது கோவிலைவிட்டு வெளியேற
வாய்ப்பில்லைனு அவருக்கு திட்டவட்டமா
புரிஞ்சு போறது.விடுவானா மனுஷன்

அம்பாள் சன்னதி,சுவாமி சன்னதி நடராஜர் சன்னதி
முன்னால இருந்த தகர சப்பர ஷெட் எல்லாம்
சல்லடைபோட்டு அலசிப் பார்த்தும்
ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப
அலுத்துப்போய் கோவில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிற
நந்திக்கு முன்னால் உட்காருரார்

அங்கே

அவருக்கு நேர் எதிரே

இருந்த மடைப்பள்ளிப் பூட்டைப்
பார்த்து அவர் அதிர்ச்சியாகிப் போறார்,

ஏன்னா அவருக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து
நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
அவர் பார்த்ததே இல்லை,

(தொடரும் )

23 comments:

  1. விவரமான ஆள்தான் போல!

    ReplyDelete
  2. ''..நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
    அவர் பார்த்ததே இல்லை,...'''
    போச்சு!...போச்சு!..........
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  3. பூட்டே காட்டிக் கொடுத்திருக்கிறது..

    ReplyDelete
  4. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    - கவிஞர் கண்ணதாசன் (படம்: அவன்தான் மனிதன்)

    ReplyDelete
  5. ஒழியத்தெரியாதவன் தலையாரி வீட்டிலே நுழைஞ்சது போலிருக்கே !
    த ம 3

    ReplyDelete
  6. ஏன்னா அவருக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து
    நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
    அவர் பார்த்ததே இல்லை .........

    பூட்டே காட்டிக் கொடுத்திருக்கிறது.. சபாஷ் !

    ReplyDelete
  7. ஆகா
    பூட்டே காட்டிகொடுத்துவிட்டதே
    தம 4

    ReplyDelete
  8. விறுவிறுப்பாக போகிறது. தொடர்கிறேன் ஆவலுடன்.

    ReplyDelete
  9. பூட்டிய பூட்டே எதிரியாகிவிட்டதே......

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. மடைப்பள்ளிப் பூட்டைப்
    பார்த்து அவர் அதிர்ச்சியாகிப் போறார்
    நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
    அவர் பார்த்ததே இல்லை,//

    பூட்டினாலும் அது திறந்தது போல் ஆகிவிட்டதோ....

    ReplyDelete
  11. ராமாயணத்திலே கைகேகியும் பாரதத்தில் சகுனியும் போல
    இங்கே இந்த மீனா விஷயத்திலே சுந்தரமையர் என்றாச்சா?
    கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.
    தொடருங்கள்

    ReplyDelete
  12. தொடருகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  13. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுட்டான் போல! அருமையாக செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. சுந்தரம் ஐயர்= சுப்பையர்.....?

    ReplyDelete
  15. கதை மாந்தர்கள் வளரும் விதம் மிக நேர்த்தி.
    அங்கங்கே தெளித்திருக்கும் தத்துவங்கள் பலே.

    ReplyDelete
  16. கதை அருமையாகப் போகிறது. எதிர்பார்ப்பெல்லாம் போதும். முழுக்கதையையும் எனக்கு அனுப்பிடுங்களேன். நமது வலைத்தளம் : சிகரம்

    ReplyDelete
  17. தொடர்ந்து வரும் சஸ்பென்ஸ். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மடைபள்ளியை பூட்டாமல் வைத்து இருந்தால் சந்தேகம் வந்து இருக்காது ! இறைவனின் லீலை என்ன செய்வது!

    ReplyDelete
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது . இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/4.html

    ReplyDelete
  20. இணையப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. விட்டுப் போன ஆறாவது பகுதியில் இருந்து ஒரே மூச்சாகப் படித்து விட்டேன்.படு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருகிறது. கதைசொல்வதில் சுப்புப் பாட்டியை விஞ்சிவிட்டீர்கள.
    துப்பறியும் கதை போல பரபரப்பாக செல்கிறது

    ReplyDelete
  21. https://kovaikkavi.wordpress.com/2014/08/08/328-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%81/

    ReplyDelete
  22. பூட்டே காட்டிக்கொடுத்துவிட்டதே.....

    ReplyDelete