Sunday, November 16, 2014

அமரகாவியம்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எதை" எனக் குழப்பிக்கொள்ளாதே
அது உன் சிந்தனையை
ஓரடி நகரவிடாது நிறுத்திவிடும்

"இதை"த்தான் என்பதில்
மிகத் தெளிவாய் இரு
சிந்தனைச் சரடின் நுனி
சட்டெனச் சிக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எப்படி"எனக் கலங்கிப் போகாதே
அது போகாத ஊருக்கு அனுப்புவதில்
மிகக் குறியாய் இருக்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இப்படித்தான்"என்பதில் திண்ணமாய் இரு
நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
தெளிவாயும் தெரியத் துவங்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"யாருக்கு" என குழம்பிச் சாகாதே
அது உன்னைச் செக்குமாடாக்கி
ஓரிடத்தினிலேயே சுழலச் செய்துவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இவர்களுக்குத்" தான்என உறுதியாய் இரு
நேர்க்கோட்டுச் சிந்தனை
இயல்பாகவே அமையப் பெற்றுவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"ஏன் " என எண்ணி மாளாதே
அது அஸ்திவாரத்தை அசைப்பதோடு
உன்னையும் செல்லாக் காசாக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
உன் இலக்கதனை மிகச் சரியாய் நேர்செய்து கொள்
உன் படைப்பு நிச்சயம் கவனிக்கத் தக்கதாகிவிடும்
காலம் கடக்கும் அமர காவியமாகியும் விடும்

16 comments:

  1. வேடன் கையில் இருக்கும் வில்லு போல எப்போதுமே விரைவும் இலக்கும் தப்பாமல்....

    ReplyDelete
  2. நேர்க்கோட்டுச் சிந்தனை சிறப்பு...

    ReplyDelete
  3. கவி என்றால் இதுதான்
    கவிஞர் என்றால் தாங்கள்தான்
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் சிந்தனை செய்ய உங்களால் மட்டுமே முடியும்

    ReplyDelete
  5. கேள்வியு நானே! பதிலும் நானே! நன்று!

    ReplyDelete
  6. ஒவ்வொரு படைப்பின் போதும்
    "இப்படித்தான்"என்பதில் திண்ணமாய் இரு
    நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
    தெளிவாயும் தெரியத் துவங்கும்//

    சிறப்பான கவிதை ஐயா..ரசித்தேன்

    ReplyDelete
  7. அமர காவியம் அற்புதம் ஐயா!
    மனதிற் பதிந்த கவிதை!

    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. அருமையான வரிகள். ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளது.

    ReplyDelete
  9. mmm....காலம் கடக்கும் அமர காவியமாகியும் விடும்
    unmai jhaan....
    Vetha.Langathilakam.

    ReplyDelete
  10. அருமையா சொன்னீங்க ஐயா! அனுபவத்தில் கண்ட உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  12. அமர காவியம் படைக்க சரியான ஆலோசனை. ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. காவியத்தை பாராட்டும் பக்கும் எமக்கில்லை ஐயா ரசித்தேன்
    எனது தொடர் பதிவு காண்க....

    ReplyDelete
  14. அமரகாவியம் நேர்கோட்டுச் சிந்தனை.

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு படைப்பாளியும் அவசியம் படிக்கவேண்டிய சிந்தனைத்துளிகள் நன்றாக உள்ளது நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete