Wednesday, November 19, 2014

ஒரு "ஏ "மட்டும் சேர்

அவர்கள் சரியாகச் சொல்லவில்லையா ?
நாம் சரியாகக் கேட்கவில்லையா ?
அது சரியாகத் தெரியவில்லை
ஆனால் புரிந்து கொண்டது எல்லாமே
மிகத் தவறாகவே இருக்கிறது

"அதிகம் படிச்ச மூஞ்சூரு
கழனிப் பானையிலே " என்றார்கள்
மூஞ்சூரு ஏன் படிக்கணும்
கழனிப் பானையிலே ஏன் விழணும்
குழம்பித் திரிந்தேன் பல நாள்

தோழன் ஒரு நாள் சொன்னான்
"அது அப்படியில்லை
அதிகம் படிந்த முன் சோறு
கழனிப் பானையிலே " என்றான்

அது சரியாகத் தான் இருந்தது

நான் தொடர்ந்து கேட்டேன்

"இன்னும் சில மொழிகள் குழப்புகிறது
உழைப்பு ஒன்றே உயர்வைத் தரும் என்கிறார்கள்
உழைப்பவன் எவனும்
முன்னேறியதாகத் தெரியவில்லை

மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார்கள்
ஏழைகள் வாழ்வு
மாறியதாகவே தெரியவில்லையே "என்றேன்

நண்பன் அழகாகச் சொன்னான்

"இதிலும் வார்த்தை விளையாட்டிருக்கிறது
ஒரு எழுத்தை நாம்
மாற்றிப் புரிந்து கொண்டிருக்கிறோம் "என்றான்:

அதிக ஆர்வமாய்  "எப்படி " என்றேன்

அவன் அலட்சியமாய்ச் சொன்னான்

"முதல் மொழியில்
உயர்வில் உள்ள" உ  "என்பதற்குப் பதில்
" அ "போடு சரியாக இருக்கும்

இரண்டாவதில் மாற்றத்திற்கு முன்
ஒரு "ஏ "மட்டும்
 சேர் வாக்கியம் மட்டும் இல்லை
நடைமுறையிலும் சரியாக இருக்கும் " என்றான்

சேர்த்துப் பார்த்தேன்
எனக்கு அது சரியென்பது போலத்தான் படுகிறது

18 comments:

  1. ஆஹா அருமையான, அழகான விளக்கவுரை ஐயா.

    ReplyDelete
  2. உண்மை எனத் தோன்றினாலும் நெகட்டிவ் அப்ரோச் ஆக இருக்கிறதே! :)))

    ReplyDelete

  3. ஸ்ரீராம். said...//
    உண்மை எனத் தோன்றினாலும் நெகட்டிவ் அப்ரோச் ஆக இருக்கிறதே!

    அதுதான் ஆதங்கம் எனக் குறித்திருக்கிறேன்
    அப்படி இல்லாமல் இருக்கத்தானே
    அனைவருக்கும் ஆசை

    ReplyDelete
  4. KILLERGEE Devakottai //

    தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பழமொழிகளுக்கு பலவித விளக்கம் :)
    த ம 3

    ReplyDelete
  6. நல்ல பழமொழிகளின் நல்ல விளக்கம்!

    ReplyDelete
  7. ஓரிரு எழுத்துக்களை வைத்து எங்களைத் தெளிவாக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. விளையாட்டாய் ஒரு கவிதை!

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா.

    சிறப்பாக தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்..
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. நல்ல விளக்கங்கள்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. அட ஆமாம் சரியாகப் படுகிறதே..

    ReplyDelete
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  13. கவிதை நடையில் நகைச்சுவையையும் அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் !

    ReplyDelete
  14. அருமையான விளக்கம் ஐயா!ஏமாற்றம் ஒன்றே என வருவது சாலப்பொருத்தம் போலும் இன்றைய உலகில்

    ReplyDelete
  15. நல்லாத்தானே இருக்கு

    ReplyDelete
  16. உழைப்பவர்களுக்கு மதிப்பு குறைவாகத் தான் உள்ளது. உலகமே குறைவான உழைப்பில் அதிக வருமானம் என்றே விருபுகிறார்கள்

    ReplyDelete
  17. Shakthiprabha said..//.

    கவிதை நடையில் நகைச்சுவையையும் அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் !//

    சரியாகச் சொன்னீர்கள்
    இது பிளாக் காமெடிதான்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete