Wednesday, November 26, 2014

வரம்வேண்டா தவமாக

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை 

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

14 comments:

  1. இவ்வாறு சிந்தனை இருந்தால்...
    எவ்வித பிரச்சனையுமேயில்லை ஐயா...

    ReplyDelete
  2. உறுதியான இச் சிந்தனை கண்டு உள்ளமும் மகிழ்கிறது .வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  3. அருமை சார்.
    நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    நல்ல கருத்தை கவியாக சொல்லிய விதம் கண்டு மகிழ்ந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    த.ம5
    எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மீள் கவிதை இதுவென்று சொல்லாமல் இருந்திருந்தால் ,கருவுக்கு பொருத்தமாய் இருந்து இருக்கும் :)
    த ம 6

    ReplyDelete
  6. //என்மூலம் வந்ததெல்லாம்
    என்னால்தான் வந்ததெனும்
    எண்ணமில்லை ///
    இது ஒன்று போதுமே
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  7. வரம்வேண்டா தவமாக
    தினமெழுத்தில் கரைவதனால்
    நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை

    பிறகென்ன கவலை! எழுதுங்கள்! எழுதிக் கொண்டேயிருங்கள்!




    ReplyDelete
  8. அருமை அய்யா.!

    ReplyDelete
  9. போற்றுதலைத் தூற்றுதலை
    ஓர்கணக்கில் வைப்பதனால்
    வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
    தேக்கமுற வாய்ப்புமில்லை

    நல்ல வரிகள்! அருமையான கவிதை!

    ReplyDelete
  10. சீரிய சிந்தனைகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. /என்மூலம் வந்ததெல்லாம்
    என்னால்தான் வந்ததெனும்
    எண்ணமில்லை /

    தலைக்கணம் அகன்றிடுமே... அருமை ஐயா
    த.ம,11

    ReplyDelete
  12. கலைவாணியின் அருள் இருக்கும் போது கவிதைக்கு பஞ்சம் இல்லை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமை அய்யா.

    ReplyDelete