Friday, January 30, 2015

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமையலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

11 comments:

  1. புதிய பாதையில் துவங்கட்டும் உங்கள் புதிய நடை வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. அருமை அருமை! அழகான படைப்பு சார்! பல சமயங்களில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், ம்ம்ம் நாம் பலவற்றை இழந்திருக்கின்றோமே....என்று நினைத்தி இனியாவது மிச்சமுள்ள காலத்தையாவது புதிய பாதையில் உன்னதமான வாழ்க்கையைச் தொடங்குவோம்...என்று தோன்றத்தான் செய்கின்றது....அருமை அருமை!!!

    ReplyDelete
  3. காலம் நம் தலையில் வைத்த குட்டு .
    சிந்திக்க வைக்கும் கவிதை சார்

    ReplyDelete
  4. புதிய பாதைப் பயணம் பழைய பாதையின் தற்றினைக் காட்டுகிறதா. ? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மேலே தவற்றினை என்றிருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  6. G.M Balasubramaniam //

    பொது வாழ்வின்
    மேன்மையைச் சொல்வதற்காக
    சொல்லப்பட்டது
    மற்றபடி கடந்து வந்த பாதையும்
    கடந்த விதமும் சிறப்பாகத்தான்
    இருந்தது இருக்கிறது
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.
    கவிதையின் வரிகள் ஒரு கனம் சிந்திக்க தூண்டுகிறது.. மிக நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அந்த சிரிப்பு மேம்படுத்த வைக்க வேண்டும்...

    ReplyDelete
  10. புதிய பாதையே நாம் கடந்து வந்த அனைத்தையும் நமக்குப் புரிய வைத்துள்ளது.

    ReplyDelete