Thursday, January 29, 2015

நேர் மற்றும் எதிர்மறை

" எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவர் முகத்திலும்
 தெளிவு படரத் துவங்கியது

11 comments:

  1. அருமை மிகவும் அருமையான ஒப்பினைகள்
    த.ம.2

    ReplyDelete
  2. இருவரின் வேறுபட்ட கோணங்கள்

    ReplyDelete
  3. கவிதை மூலம் எங்களுக்கும் தெளிவு பிறந்தது. நன்றி.

    ReplyDelete
  4. அருமையான ஒப்பீடு.....

    த.ம. 7

    ReplyDelete
  5. இரண்டுக்கும் வக்காலத்து வாங்கும் சாமர்த்தியம் ரசிக்க வைக்கிறது

    ReplyDelete
  6. அஹா! அருமையான இரு கோணங்கள் ஒப்பீடு! ரசித்தோம்!

    ReplyDelete
  7. //உடன் முரண் கருத்துக் கொண்ட இருவரும் ஒன்றாகி என்னுடன் முரண்படத் துவங்கினர்//

    அருமையான திருப்பம். சொன்னது அழகு. முடிவும் அருமை.

    ReplyDelete