Thursday, January 29, 2015

கீறல் ...

திசை மாறாது
பொழுது மாறாது
மிக இயல்பாய்
இருளுண்டு
அனைத்தையும்
விளங்கக் காட்டிப் போகும்
அனைத்தையும்
இயங்கவைத்துப் போகும்
அந்தக் கதிரவனினும்

திசைக் கணக்கின்றி
பொழுதுக் கணக்கின்றி
தாறுமாறாய்
இருள் கூட்டிக் காட்டி
அனைத்தையும்
மிரளவைத்துப் போகும்
அந்த ஒரு நொடி மின்னலே

மனம் கீறிப் போகிறது
அந்த நொடியினை
மறக்காது செய்து போகிறது

புரியாதே
பம்மாத்துக் காட்டும்
சில அற்புத
வசன கவிதைகள் போலவும்...

13 comments:

  1. அனைத்தையும்
    விளங்கக் காட்டிப் போகும் கீறல் ...!
    அனைத்தையும்
    மிரளவைத்துப் போகும் கீறல் ...!
    சில அற்புத
    வசன கவிதைகள் போல....
    உண்மையான மின்னல் இதுவே.......
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. //புரியாதே
    பம்மாத்துக் காட்டும்
    சில அற்புத
    வசன கவிதைகள் போலவும்...//
    :))
    தம4

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    கவிதையின் வரிகள் அற்புதம் .. பகிர்வுக்கு நன்றி.த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கவிதை வரிகள் மிக அழகு!

    ReplyDelete
  5. இருள் கிழிக்கும் கீற்றைப்போலவே
    படிக்கவே பயத்தை உண்டாக்கும்
    சில விளங்காத கவிதைகள்.....+1

    ReplyDelete
  6. இதுவும் ,ஒரு நொடி சிநேகம்தான் என்றாலும் தொடர்ந்து தருதே இனிமை !
    த ம 8

    ReplyDelete
  7. "மிரளவைத்துப் போகும்
    அந்த ஒரு நொடி மின்னலே!"
    ஆஹா!
    கீறலின் கீதம்
    இனிமை

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. //அந்த ஒரு நொடி மின்னலே மனம் கீறிப் போகிறது
    அந்த நொடியினை மறக்காது செய்து போகிறது

    புரியாதே .... பம்மாத்துக் காட்டும் சில அற்புத வசன கவிதைகள் போலவும்... //

    அருமை. பலரின் கவிதைகள் எனக்குப் புரிவதே இல்லை. என்னென்னவோ எழுதிக்கொண்டே போகிறார்கள்.

    தங்களுடையது மட்டுமே கொடி மின்னலாகப் பளிச்சிடுகிறது .... எனக்கு. :)

    ReplyDelete