Tuesday, January 6, 2015

சிகரம் அடையச் சுருக்கு வழி

எவ்வளவு முழுமையாக
நுரையீரலிருந்துக் காற்றை
வெளியேற்ற முடியுமோ
அவ்வளவு வெளியேற்றுங்கள்

பின் இயல்பாக
தனக்குத் தேவையானக் காற்றை
நுரையீரல் தானகவே
நிரப்பிக் கொள்ளும்

எவ்வளவு அதிகமாக
உழைப்பாலோ உடற்பயிற்சியாலோ
பசியை மட்டும்
உண்டாக்கிக் கொள்ளுங்கள்

பின் நிறைவாக
தனக்குத் தேவையான உணவை
நமது இரைப்பைத் தானாகவே
நிரப்ப முயலும்

எவ்வளவு விரைவாக
பக்தியாலோ முயற்சியாலோ
அவ நம்பிக்கையை மட்டும்
அடியோடு விரட்டுங்கள்

மிக எளிதாக
நம்முள் கருகொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்

20 comments:

  1. #பக்தியாலோ#
    இதுதான் கொஞ்சம் உதைக்கிறது ,மற்றபடி கவிதை இனிக்கிறது :)
    த ம 2

    ReplyDelete
  2. பக்தி என்பதும் முயற்சி தான்..
    கனவுகள் யாவும் நிஜமாகும்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. வணக்கம்
    அருமையான கருத்தை சொல்லியுளீர்கள் இரசிக்கவைக்கும் வரிகள்
    பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அவநம்பிக்கையை வேரறுத்து நம்முள் தன்னம்பிக்கையை விதைக்கும் அழகிய சிறு கவிதை!!

    ReplyDelete
  6. ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  7. கனவுகளை நிஜமாக்கும் கருவூலப்பெட்டகம் தங்கள் வரிகள்.

    ReplyDelete
  8. oom...mulu unmai....
    Vetha.Langathilakam

    ReplyDelete
  9. சிகரம் அடையச் சுருக்கு வழி
    வாழ்வில் உயரச் சிறந்த வழி
    அவ நம்பிக்கையை விரட்டி
    தன் நம்பிக்கையைப் பெருக்கு
    அதுவே வழி!

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  10. உழைப்பால் உடற்பயிற்சியால் பசியை உண்டாக்கிக் கொண்டால் பின் நிறைவாக
    தனக்குத் தேவையான உணவை
    நமது இரைப்பைத் தானாகவே
    நிரப்ப முயலும் என்கிறீர்கள் நிரப்பிக் கொள்ளும் என்று சொல்லவில்லையே. பகவான் ஜியை நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  11. கனவுகளை நனவாக்குவதற்கான வரிகள் அருமை.
    த.ம 6

    ReplyDelete
  12. எளிமையாக ஓர் ஆலோசனை! இனிமையான கவிதை வடிவில்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா!

    சுருக்கு வழியென்று சொன்ன கவியை
    விருப்புடன் கொண்டேன் விரைந்து!

    மிக அருமை ஐயா! அற்புதமான சிந்தனை!..

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நம்முள் கருகொண்ட கருக்கொண்ட
    கனவுகள் யாவும்
    நிஜமாகத் துவங்கும்

    அருமை அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  15. மிக எளிதாக
    அவநம்பிக்கையை வெளியேற்றினால்
    //நம்முள் கருகொண்ட கருக்கொண்ட
    கனவுகள் யாவும்
    நிஜமாகத் துவங்கும்//

    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரரே!

    மிக அருமையான சிந்தனையுடன் ௬டியக் கவிதை...

    சிகரம் அடைந்த சுருக்கு வழியில், தன்னம்பிக்கை மிகுந்த பாதையில் பயணித்த திருப்தியை தந்தது, தங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளும்....
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. பக்தி என்பதும் ஒரு நம்பிக்கைதானே!அம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே
    அருமையான கவிதை!

    ReplyDelete