Monday, January 5, 2015

அதிசய விருந்துக் கூடம்

இந்த விருந்துக் கூடம்
அற்புதமானதாக மட்டும் இல்லை
மிக அதிசயமானதாகவும் இருக்கிறது

விருந்தாளியாய் வருவோரே
விருந்து கொடுப்பவர்களாகவும்
விருந்து கொடுப்போரே
விருந்தாளியும் இருப்பதால்

இந்த விருந்துக் கூடம்
புதுமையானதாக மட்டுமில்லை
புரட்சிகரமானதாகவும் இருக்கிறது

நண்பர்களை மட்டும்
அழைப்பாளர்களாய் கொள்ளாமல்
வருவோரையெல்லாம்
நண்பர்களாகக் கொள்வதால்

இந்த விருந்துக் கூடம்
பெருமைக்குரியதாக மட்டுமல்ல
பெருமைப்படுத்துவதாகவும் இருக்கிறது

விதிமுறைகள் இல்லையெனினும்
விதி மீறாதவர்களாலும்
வரையரைகள் இல்லையெனினும்
அதனை மீறாதோர் நிறைந்திருப்பதால்

ஆம் இந்தப்

பதிவர் விருந்துக் கூடம்
வியப்பளிப்பதாக மட்டும் இல்லை
விரும்பத் தக்கதாகவும் இருக்கிறது

19 comments:

  1. வேறொன்றும் அமையுமோ
    விரும்பத் தக்க விருந்தகம்!..

    ReplyDelete
  2. தங்களைப் போன்ற புரவலர்களால்
    என்றும் பொலிந்திருக்கும் வலையகம்!..

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
  4. பதிவர் சந்திப்பு விழாவின் தாக்கம் இன்னும் குறையவில்லைபோல் இருக்கிறது.

    ReplyDelete
  5. அருமையான விருந்தோம்பல் கவிஞரே...

    ReplyDelete
  6. வணக்கம்
    கவிஞர் ஐயா

    பதிவர் சந்திப்பு பற்றி சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. ஆம் இந்தப்

    பதிவர் விருந்துக் கூடம்
    வியப்பளிப்பதாக மட்டும் இல்லை
    விரும்பத் தக்கதாகவும் இருக்கிறது

    நல்ல கருத்து!

    ReplyDelete
  8. நல் கவி விருந்து படைப்பு

    ReplyDelete
  9. வலைத்தள நண்பர்கள் வட்டத்தினை, புதுமையான விருந்து மண்டபம் ஒன்றினுக்கு உருவகித்த கவிஞருக்கு பாராட்டுக்கள்.
    த.ம.4

    ReplyDelete
  10. பதிவர் விருந்து நல்ல பதிவு. விருந்து படைப்போர் அனைத்தையும் பரிமாறுவர். இதில் உற்சாகமும் உண்டு .உற்சாக பானமும் உண்டு ;ஒவ்வாமையும் உண்டு. வதந்தியும் உண்டு .வாந்தியும் உண்டு.அனைத்தையும் படைக்கும் விருந்து. நல்ல பதிவு .விருந்து வாலிப வயோதிக ஆன்மீக நாத்திக விருந்து. ஐயோ!விருந்து சொல் படுத்தும்பாடு. ஐயா !பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. பதிவர்களை சிறப்பித்த சிறப்பான பதிவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  12. எந்த விருந்துக்கூடம் என்ற ஆவல் நீடித்துக்கொண்டே வர பதிவர் குழாமை அழைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. விருந்துண்டேன்.
    அருமையாக உள்ளது இரமணி ஐயா.

    ReplyDelete
  14. மீண்டும் ஒருமுறை பதிவர் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு தந்தது இந்த விருந்து !
    த ம 7

    ReplyDelete
  15. வருவோரையெல்லாம்
    நண்பர்களாகக் கொள்வதால்

    இந்த விருந்துக் கூடம்
    பெருமைக்குரியதாக மட்டுமல்ல
    பெருமைப்படுத்துவதாகவும் இருக்கிறது//

    மிகவும் ரசித்தோம்! அருமையான விருந்து!!! ஆம்!

    ReplyDelete
  16. விருந்து கூடம் பாராட்டை
    பரிமாறும் கூடமாக அமையப் பெறுமானால்?

    வயிற்றுக்கு உணவு இல்லாத போது
    சிறிது
    செவிக்கும் கிடைக்கும் அல்லவா?
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரரே!

    அற்புதமான விருந்துக் ௬டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். சுவை மிகுந்த பதிவுகளாய், தாங்கள் அளிக்கும் விருந்து அறிவுப் பசியைப் போக்கும் அமிர்தமாக திகழ்கிறது.

    நீங்கள் அமைத்த இந்த விருந்துக் ௬டம்,
    \\பெருமைக்குரியதாக மட்டுமல்ல
    பெருமைப்படுத்துவதாகவும் இருக்கிறது//

    விருந்தோடு விருந்துக் ௬டத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  18. இந்த விருந்து என்றும் சிறக்கும் ஐயா...

    ReplyDelete