Monday, February 2, 2015

கொடிகளும் நிறங்களும்...

ஏழ்மையை
இருவகையில் அழிக்கலாம்

ஏழைகளை அழித்தாலும்
ஏழ்மை அழிந்துவிடும்

ஏழ்மையை அழித்தாலும்
ஏழைகள் அழிந்திடுவர்

நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம்
ஏனோ முதலில் சொல்லியதே
சுலபமானதாகப் படுகிறது

செல்வத்தை
இருவகையில் பெருக்கலாம்

செல்வர்களை வளர்த்து
செல்வத்தைப் பெருக்கலாம்

செல்வத்தைப் பெருக்கியும்
செல்வர்களைப் பெருக்கலாம்

நம் அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
நம் தலையெழுத்தோ என்னவோ
முன்னதே சுலபமானதாய்த் தெரிகிறது

என்ன செய்வது
கொடிக்கம்பத்தில்
வேறு வேறு வண்ணத்தில்
தெரிகிற கொடிகளெல்லாம்
வேறு வேறு கொள்கையைச் சொல்வதாய் எண்ணி
நாமும் மாறி மாறி ஓட்டளித்து
ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தும்..

அனைத்து கொடிகளும்
ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காக மட்டுமே
பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
எத்தனை அடிவாங்கியும்
நம் புத்திக்கு  மட்டும்
இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை

15 comments:

  1. அனைத்து கொடிகளும்
    ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
    வித்தியாசமாகத் தெரியவேண்டும்
    என்பதற்காக மட்டுமே
    பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
    எத்தனை அடிவாங்கியும்
    நம் புத்திக்கு மட்டும்
    இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை//

    உண்மைதான் உறைக்கவே இல்லை.
    தம் 2

    ReplyDelete
  2. வணக்கம்.

    உண்மைதான் நமக்கு உறைக்கவே இல்லை.

    அருமை.

    ReplyDelete
  3. உறைக்காது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  4. உரைக்கும் வண்ணம் உரக்கத்தான் சொல்கிறது கவிதை. உணர்வோமா?

    ReplyDelete
  5. நம் புத்திக்கு உறைக்கவில்லை என்ற வரிகளைப் படித்தபோது உங்களின் ஆதங்கத்தை அறியமுடிந்தது. தினமும் ஒவ்வொரு பொருண்மையில் எழுதப்படும் கவிதைகள் மிகவும் பொருத்தமானவையாகவும், காலத்திற்குத் தேவையானவையாகவும் உள்ளன.

    ReplyDelete
  6. எத்தனை அடிவாங்கியும்
    நம் புத்திக்கு மட்டும்
    இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை

    உண்மை
    உண்மை
    தம +1

    ReplyDelete
  7. உண்மை எனினும் உறைத்தாலும் பயன் இல்லை அது தான் தொடர்கிறது .பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  8. இவற்றில் கட்சிக் கொடிகள் மட்டுமே அடங்கும் என்று நினைக்கிறேன் இல்லை தேசக் கொடிகளுமா.?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நாம் மரமண்டையர்கள் ஆனோமோ?!!!

    ReplyDelete
  11. எத்தனை அடி வாங்கியும் உறைக்காத உண்மை! அது தான் நிதர்சனம்.

    த.ம. +1

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா.
    100%உண்மையான வரிகள் ஐயா..பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. //எத்தனை அடிவாங்கியும் நம் புத்திக்கு மட்டும்
    இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை//

    உறைக்காது ..... உறைக்கவும் விடமாட்டார்கள் ..... அரசியல்வாதிகள் மூளைச்சலவை செய்வதில் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே !

    ReplyDelete