Saturday, July 25, 2015

கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப் போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது  ?"
கட்டுகட்டாய்  உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நீ தராவிட்டாலும் 
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகப் புலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான்  நண்பன்

நான் புரிந்திருந்ததை  மெல்ல விளக்கினேன் 

" இது கொட்டிக்  கிடக்குமிடம்
அள்ளித் தரும் இடமில்லை

நம்பிக்  "கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்
.
ஏனெனில் 
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

13 comments:

  1. #அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
    எடுத்துக் கொண்டு செல்கிற இடம் #
    உண்டியலில் சேர்வதை... என்று சொல்லி இருக்கலாம் :)

    ReplyDelete
  2. ம்....

    "அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை... அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை!"

    ReplyDelete
  3. நம்மவர்களின் தலையாட்டலைப் ( மேலும் கீழுமாகவோ, பக்கவாட்டாகவோ) புரிந்து கொள்வதே முடியவில்லை என்கிறார்கள் அயல் நாட்டினர். ஆம் இல்லை என்று வாயால் சொல்லி விடு என்பார்கள்.

    ReplyDelete
  4. நம்பிக் "கை"யின்றி வருபவர்கள்
    எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை//
    அருமை.

    ReplyDelete
  5. நம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கின்றது!

    உங்கள் சிந்தனை எப்பவுமே அலாதிதான் ஐயா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இளமதி சொல்வது போல, உங்கள் சிந்தனை எப்பவுமே அலாதிதான்

    ReplyDelete
  7. நம்பிக்கையே கடவுள் என்று அருமையாக சொன்னது படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நம்பிக்கையே
    நம்மை வழிகாட்டுகிறது

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
  9. படிக்கும்போது எங்களுக்கும் கொஞ்சம் குழப்பம் வந்தது.

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா.
    நம்பிக்கைதான் வாழ்க்கை.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.த.ம் 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. திருமலையில் சென்றவர்கள் எல்லாரும் அவரவர் சக்திக்கு (உண்டியல், முடி)கொடுத்துச் செல்கிறார்களே!!! அய்யா...

    ReplyDelete