Sunday, July 26, 2015

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று.......

ஓரிடம் எனக்கென உண்டோ -இல்லை
கோடியில் ஓரிடம் தானோ
காரிருள் சூழுதல் போல-நெஞ்சில்
சூழுதே குழப்பமே ஏனோ

வேலினைத் தாங்கிய வேலா-எந்தன்
வேதனை ஒழித்திட வாராய்
தாளினை பற்றியே நின்றேன்-உந்தன்
கருணையைப்  பொழிந்தெனைக் காவாய்

சுழன்றிடும் உலகினில் என்றும்-நிலைத்த
புகழுடன் விளங்கிட வேண்டின்
அளவினை மீறிய செல்வம்-உடன்
ஆட்பலம் திமிருடன் சக்தி

பதவியும் பவிசதும் வேண்டும்-என்று
பழகிய பூமியில் நானே
இதமுடன் உலகிது உய்ய-நாளும்
உயர்கவி அளித்திடல் ஒன்றே

நலம்தரும் நல்வழி என்று-மாறா
நிலையினை மனதினில் கொண்டு
வலம்வரும் என்நிலை சரியா-என
மனமது குழம்புது தினமே

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று-பக்தர்
குறைகளைக் கலைந்திடும் குமரா
என்மனக் குறையதும் கலைந்து-நான்
தெளிவுறும்  வழிதனை அருள்வாய்

11 comments:

  1. #உயர்கவி அளித்திடல் ஒன்றே#
    அருள் புரியட்டும் வள்ளி தெய்வானை மணாளன் :)

    ReplyDelete
  2. குமரன் அருள் என்றும் உண்டு ஐயா...

    ReplyDelete
  3. நலம்தரும் நல்வழியில் சென்றால் மனது குழம்பாது அய்யா..

    ReplyDelete
  4. நாளும்
    உயர்கவி அளித்திடல் ஒன்றே
    நலம்தரும் நல்வழி என்று-மாறா
    நிலையினை மனதினில் கொண்டு
    வலம்வரும் என்நிலை சரியா-என
    மனமது குழம்புது தினமே//

    இதற்கான பதில் இதோ நீங்களே கொடுத்துவிட்டீர்களே...

    வேலினைத் தாங்கிய வேலா-எந்தன்
    வேதனை ஒழித்திட வாராய்
    தாளினை பற்றியே நின்றேன்-உந்தன்
    கருணையைப் பொழிந்தெனைக் காவாய்//

    அருளிடுவான் வடி வேலன்!!!

    ReplyDelete
  5. வேலன் அருள் என்றும் உண்டு ஐயா...

    ReplyDelete
  6. அருமையான வேண்டல் கவிதை ஐயா!
    நிச்சயம் குமரன் உங்களுக்கு அருள்புரிவான்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் தெளிவுறும் வழி தானாய்த் தெரியும்

    ReplyDelete
  8. குமரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    குமரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்... த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete