Saturday, August 1, 2015

இன்பம் கொள்ளும் சூட்சுமம்

எங்கும் ஜாலி எதிலும் ஜாலி
என்றும் ஜாலி ஜாலி-அதனால்
எங்கள் வழியில் என்றும் இல்லை-
கவலை அதற்குச் ஜோலி

விடிதல் வேண்டி வீணே நிற்கும்
எண்ணம் கடந்து விட்டோம் -அதனால்
முடியும் மட்டும் ஒளியைக் கூட்டி
இருளை நடுங்க வைத்தோம்

உணர வருவதே மகிழ்வு என்பதை
தெளிவாய்ப் புரிந்து கொண்டோம்-அதனால்
தினமும் வெளியில் தேடி அலையும்
அவலம் கடந்து விட்டோம்

பெறுதல் கொடுக்கும் இன்பம் சிறுமை
உணர்ந்து தெளிவு கொண்டோம்-அதனால்
கொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்
குணத்தைப் பெருக்கிக் கொண்டோம்

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
என்று மகிழ்ந்த ஒருவன்-இங்கே
மெத்தச் செல்வம் கொண்டு வாழ்ந்த
மனிதன் இல்லை தோழா

இதனை மட்டும் மனதில் கொண்டால்
போதும் அன்புத் தோழா-உனக்கும்
நிதமும் மகிழ்ந்து வாழும் தெளிவு
உன்னுள் பரவும் தானா

7 comments:

  1. நித்தம்நித்தம் புதிய சிந்தனை கவிதை வடிவில் அதுவும் சும்மா ஜாலிக்கு என்றால்.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. G.M Balasubramaniam //

    .நண்பர்கள் எனில் ஜாலிதான்
    நண்பர்கள் தின கவிதையும்
    ஜாலிகுறித்து இருந்தால் ஜாலிதானே

    ReplyDelete
  3. உண்மைதான் ஐயா!
    மனத்தின் அன்பினைக் கொடுத்து வாங்குவதே
    பெரிய இன்பம்தான்!
    மொத்தத்தில் ஜாலி கவிதை ஜாலிதான்!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம் ,
    இருளை நடுங்க வைத்தோம்,,,,,,,,,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  5. நல்ல கவிதை ஜாலியாகவே இருந்தது.
    த.ம. 5

    ReplyDelete
  6. உன்மைதான் நண்பரே! //அதனால்
    கொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்
    குணத்தைப் பெருக்கிக் கொண்டோம்// பொருளாக இல்லாவிடினும் நம் அன்பினைக் கொடுக்கக் கொடுக்க அது இன்பம்தான்....ரசித்தோம் வரிகளை...

    ReplyDelete