Friday, July 31, 2015

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளி அரங்குகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
நம் உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு

வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு

எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு

மனத்தைப் பொருத்தே
செயலின் போக்கு

செயலைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்
 எப்போதும்
 இதனை
மறவாது மனதில் கொள்வோம்-

வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வென்று உயர்வோம் 

10 comments:

  1. சீரிய எண்ணங்கள்....

    ReplyDelete
  2. மனதைப் பொறுத்தே எதுவும்... அருமை ஐயா...

    ReplyDelete
  3. எண்ணத்தைச் சீர் செய்தால் ஏற்றமுண்டு என்றுணர வைத்த வண்ணக் கவிதைக்கு
    வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  4. யாவும் எண்ணங்களே. வலிமையான ஆயுதம்

    ReplyDelete
  5. வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு.....

    ReplyDelete
  6. வணக்கம்,
    5 ம் அருமையான கருத்து,
    மனம் தான் அனைத்திற்கும் காரணம்,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  7. எண்ணமே முக்கியம் என்று கூறும் கவி அருமை ஐயா
    த.ம.6

    ReplyDelete
  8. மிகச்சிறப்பான கருத்து! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே.

    தாங்கள் ௬றியதனைத்தும் உண்மைதான். எண்ணங்களின் சிறப்புத்தான் வாழ்வை ஏற்றமடையச் செய்யும். சிறந்த கருத்துக்களை மனதில் பதிய வைத்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. நூலைப் பொருத்தே
    சேலையின் வனப்பு

    வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு

    எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு

    மனத்தைப் பொருத்தே
    செயலின் போக்கு

    செயலைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//

    உண்மைதானே! அருமையான கருத்து!

    ReplyDelete