Friday, July 31, 2015

கலைகளின் தெய்வமே சரஸ்வதி

ஒருநொடி உனதிரு அருள் விழி
எந்தனைக் கண்டிட அருள்புரி
அருவியும் மருகிடும் வகையினில்
கவியது பெருகிடத் தினமினி

ஒருமொழி திருமொழி எனும்படி
முதலடி தொடுத்தெனை நடத்துநீ
கருவது ஊற்றெனப் பெருகிட
கவியென உலகிதே போற்றிட

தினமொரு கணமது உன்வழி
நினைவுகள் கடந்திட துணைபுரி
மனமது மலரென மலர்ந்திட
கவியது மழையெனப் பொழிந்திட

உனதொரு அருளினை அண்டியே
பிதற்றுமென் கவிமன நிலையறி
உனதடி சரணமே சரணமே
கலைகளின் தெய்வமே சரஸ்வதி

6 comments:

  1. கடகட வென உருளும் சந்தத்துடன் கவிதை அருமை

    ReplyDelete
  2. சந்த நயத்துடன் மிளிரும் சரஸ்வதி வாழ்த்து அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்று...நன்று....

    ReplyDelete
  4. சரஸ்வதி உண்மையாகவே இதில் நடனம் புரிகின்றார்! உங்கள் வரிகளில்!! அருமை!

    ReplyDelete