Thursday, October 1, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 10 )

மக்களால் மக்களுக்காக மக்களுடன் என்பதைப்போல்
பதிவர்களால் பதிவர்களுக்காக பதிவர்களுடன்
வருடா வருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பதிவர்  சந்திப்புத் திரு நாளுக்கான அழைப்பிதல்
இதோ இப்போது தங்கள் பார்வையில்..

முதல் ,இடை ,கடையென தமிழ்சங்கம்
முடிவடையாது கணினி ச் சங்கம் என
 நான்காவது சங்கமாய் தொடர்ந்து கொண்டுதான்
 இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாய்
இதோ இப்போது நம் புதுகையில்...

தங்கள் படைப்பில் சிறந்து எது எனக் கேட்பின்
இதுவரை படைத்ததல்ல இப்போது
படைத்துக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பு
எனச் சொல்லும் துடிப்புமிக்க படைப்பாளியைப் போல்

இதுவரை நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை
மிஞ்சும் வகையில்உங்கள் பங்களிப்புடன்
நடைபெற இருக்கிறது
இந்தப்  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு

அவசியம்  தவறாது கலந்து கொள்வீர்
நிறைவான மகிழ்வை அள்ளிச் செல்வீர்

 

15 comments:

  1. கவிஞரின் அழைப்பிதழுக்கு நன்றி!
    புதுக்கோட்டையில் சந்திப்போம்

    ReplyDelete
  2. அழைப்பிற்க்கு நன்றி கவிஞரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. அருமை ஐயா,,
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நம் வீட்டு விசேஷத்துக்கு அழைப்பு.......! வாழ்த்துக்களுடன் நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறக்க எனது வாழ்த்துக்கள்
    த.ம4
    நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமை ஐயா
    புதுகையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. பதிவுகள் வழியாக சந்திப்பிற்கு தங்களின் பங்கீடு பாராட்டுக்குரியது. நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  8. வலைப்பதிவர் சந்திப்புப் பற்றி தொடர்ந்து பதிவிடும் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. அழைப்பும் அருமை.
    விழாவில் சந்திப்போம் அய்யா!

    ReplyDelete
  9. மதுரை சிங்கத்தை இந்த தடவையும் காணொளி மூலம்தான் தரிசனக்க முடியும் போல இருக்கிறது

    ReplyDelete
  10. அழைப்பிதழோடு அழைத்து விழாவிற்கு அழகு சேர்த்திதிருக்கிறீர்கள் அய்யா. மனமார்ந்த நன்றிகள். புதுக்கோட்டையில் சந்திப்போம் அய்யா.

    ReplyDelete
  11. அழைப்பிதழோடு அழைத்து விழாவிற்கு அழகு சேர்த்திதிருக்கிறீர்கள் அய்யா. மனமார்ந்த நன்றிகள். புதுக்கோட்டையில் சந்திப்போம் அய்யா.

    ReplyDelete
  12. அழைப்பு அருமை!
    மகிழ்ச்சியாக உள்ளது.
    விழா சிறப்புற வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. அழைப்பு அருமை! விழாவில் சந்திப்போம்...ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

    ReplyDelete