Friday, October 2, 2015

புதுகை நகரைக் கலக்க வாரீர் 11

எதுகை மோனைத் தேடித் தேடி
இளைத்துக் கிடந்த பதிவர் எல்லாம்
புதுமை புரட்சி என்று எழுதி
பொங்க வைத்த பதிவர் எல்லாம்
முதுமை வந்தும் இளையோர் போல
இயங்கி வந்தப் பதிவர் எல்லாம்
புதுகை புதுகை என்று நித்தம்
பதிவு போடும் மாயம் என்ன ?

முகநூல் போதும் என்று ஓடி
மூலம் மறந்த பதிவர் எல்லாம்
பகர எளிது டுவிட்டர் என்றே
பறந்து போன பதிவர் எல்லாம்
உடனே பகிர வாட்ஸப் போல
உண்டோ என்ற பதிவர் எல்லாம்
திடமாய்  மாறி பதிவர் அணியில்
திரண்டு விட்ட மாயம் என்ன ?

நான்காம் சங்கம் இதுவே என்று
நாடே வியந்து போற்றும் வண்ணம்
மீண்டும் இதுபோல்  நடத்தல் அரிதே
என்று உலகே வியக்கும் வண்ணம்
மாய்ந்து மாய்ந்து புதுகைப் பதிவர்
ஆற்றும் பணியே காரண மென்பேன்
ஆய்ந்து அறிய  திரண்டு வாரீர்
புதுகை நகரைக் கலக்க வாரீர்

14 comments:

  1. அருமை. சந்தமும் நயமும் மனதை கவர்கிறது

    ReplyDelete
  2. அருமை கவிஞரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. பதிவர் விழா பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் எங்களை வியக்க வைக்கின்றன சார்...உங்களைப்போன்ற பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் விழா புதுகையில் நடப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது

    ReplyDelete
  4. கலக்குவோம், வாருங்கள். பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  5. மிகவும் அருமை ஐயா ! வாழ்த்துக்கள் எண்ணம் போல் எல்லாம் நிகழட்டும் .

    ReplyDelete
  6. காத தூரம் பாதம் பதியக்
    கலக்குகின்றோம் நாங்கள்,
    மாதம் பத்துப் பதிவு போட்டு
    கலக்குகின்றீர் நீங்கள்!

    ReplyDelete
  7. இதே உற்சாகம் விழா முடிந்தபின்னும் இருக்க வேண்டும்

    ReplyDelete
  8. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
  9. உண்மை! புதுகை விழா சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    ReplyDelete
  11. ஏற்பாடுகள் நன்று! தங்கள் கூற்று உண்மை!

    ReplyDelete
  12. அட! நான்காம் சங்கம்!!!! உண்மைதான் அவர்களது உழைப்பு போற்றத்தக்கது....

    ReplyDelete