Tuesday, November 3, 2015

என்று இளவரசியை மணந்து சொகுசாய் வாழப் போகிறோம் ?

சிறு வயதில்
நானறிந்த அரக்கனின் உயிரெல்லாம்
அவனிடத்தில் இருந்ததே இல்லை

அது எப்போதும்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலைதாண்டி
இருண்ட குகையின்
ஒரு கூண்டுக் கிளியிடம் தான் இருந்தது

முட்டாள் வீரர்கள் எல்லாம்
நேரடியாய் மோதி
வீணாய் வீர மரணமடைய
புத்திசாலி இளவரசன்
ஒருவன் மட்டுமே
கிளிதேடிப் போவான்

அரக்கனைக் கொன்று
இளவரசியையும் மணப்பான்

இப்போதும்
அரக்கனாய் அழிச்சாட்டியும் செய்யும்
அனைத்து தீவினைகளுக்குமான உயிர்
அனைத்து அழிவுகளுக்குமான உயிர்
நிகழ்வுகளில் இல்லை
நிகழ்த்துபவனிடமும் இல்லை
சூழ்நிலைகளிலும் இல்லை

அது  அரசின் அரவணைப்பில் இருக்கிறது
அது"பார்"களில் இருக்கிறது
அது பாட்டிலில் இருக்கிறது

அன்றைய முட்டாள்
வீரர்கள் போல்
சவத்துடன் மோதி
சக்தியை இழக்காமல்
என்று
நிஜத்துடன் மோதி
நிம்மதி பெறப்போகிறோம்

பள்ளியை விட்டு
கோவில்களை விட்டு
எட்டத் தள்ளி என்றில்லாமல்

மக்களை விட்டு
தமிழகம் விட்டு
நாட்டை விட்டு
தள்ளி வைக்கப் போகிறோம்

என்று நாமும்
புத்திசாலி இளவரசனாகப் போகிறோம் ?

என்று சுகவாழ்வேனும் 
இளவரசியை மணந்து
சொகுசாய் வாழப் போகிறோம் ?

12 comments:

  1. உருக்கமான ஏக்கம்.

    ReplyDelete
  2. தங்களின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் விடிவு காலம்?!

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள். முட்டாள் வீரர்களைப் போலவே பலரும் இன்று வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள். புத்தியை தீட்டுவதில்லை.

    ReplyDelete
  4. ஐயோ.... அரசு என்று இளவரசி அம்மாவைப் பூதமாக்கி விட்டீர்களே.....

    ReplyDelete
  5. ஹ்ம்ம்ம் பதில் தெரியவில்லையே ஐயா.. உங்கள் சிந்தனையை வியக்கிறேன். நன்றி ஐயா

    ReplyDelete
  6. பார்களும் பார்ட்டிகளும் தமிழகத்தின் ஏக போக சொத்தில்லையே பிரச்சனை நம் சிந்தனையில் இருக்கிறது யார் பெரியவன் யார் உயர்ந்தவன் என்பதிலேயே இருக்கிறது குடியும் ஒருவகையில் காரணம்தான்

    ReplyDelete
  7. எப்போது என்பது யாருக்குமே தெரியாத நிலையில்தான் இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்று!

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    இரசித்தேன் ... அருமையாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நல்லதொரு ஆதங்கம்... அந்த நாள் வருவது எந்நாளோ....

    ReplyDelete