Wednesday, January 27, 2016

அடியாருக்குச் செய்கிற சேவை....

 நான் சார்த்திருக்கிற அரிமா  சங்கத்தின் கொள்கை  
தொண்டும் தோழமையும் தான் .
அதன் காரணமாகவே அதன் லோகோவில்
we serve  என்கிற ஆங்கில  வாசகங்கள்
குறிக்கப் பட்டிருக்கும் .

தனியாகச் செய்கின்ற சேவைகளை விட
கூட்டாகச் செய்கையில்மிகப்  பெரிதாகவும்
செய்ய முடிவதோடு மட்டும் அல்லாது
தன்  முனைப்பும்  ( ego )இல்லாமல் போய்விடும்  வாய்ப்பதிகம்

அத்துடன் ஆண்டவனுக்குச் செய்கிற   சேவையினும்
அவரின்அடியாருக்குச் செய்கிற சேவை
சாலச் சிறந்தது என்பதைப் போல..

சமூகத்திற்கு  எதையும் எதிர்பாராது  தன்  பங்கை
அளிக்கிறவர்களைஅழைத்துக் கௌரவிப்பது  ,
அவர்களுக்கு  தொடர்ந்து   சேவை செய்ய
ஊக்கமளிக்கும் என்பதால்  ....

ஒவ்வொரு அரிமா சங்கமுக்கிய நிகழ்வுகளிலும்
சமூகச் சிந்தனையாளர்கள், ஆர்வலர்கள் ,
மற்றும் ,சிறந்த சமூகச் சேவகர்களை அழைத்துக் 
கௌரவிப்பது   வழக்கம்

அந்த வகையில் இந்த முறை ,ஆழ்துளை  கிணற்றில்
விழுந்தகுழந்தைகளை மீட்கும் ரோபோ   கருவியைக்
கண்டுபிடித்தஇளம் விஞ்ஞானி
திரு மணிகண்டன் அவர்களைஅழைத்துக்
கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது .

அந்த நிகழ்வின் புகைப்படத்தைத தங்களுடன் 
 பகிர்ந்து கொள்வதில்  மிக்க மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...




விருது வழங்கி கௌரவிப்பவர்
 324  B3 அரிமா மாவட்ட  ஆளு நர்
லயன் .S.ராமசுப்பு P.M.J.F  அவர்கள் ..

10 comments:

  1. திரு மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இளம் விஞ்ஞானி திரு மணிகண்டன் அவர்களைக் கவுரவித்த அரிமா சங்கத்தினருக்கும், இதனைப் பதிவிட்ட லயன் எஸ்.ரமணி அய்யா அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. திரு மணிகண்டன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
  4. சாலச் சிறந்த சேவைக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா !

    மிக நல்ல சேவை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  9. நல்ல பணி இரமணி! திரு மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete