Saturday, January 30, 2016

கொஞ்சம் பின்னோக்கி.....

2010 இல் துவங்கி இன்று வரை
ஏறக்குறைய 800 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன்

முதலில் எழுதுவதை விட பின்னூட்டமிடுவதில்
அதிக ஆர்வம் இருந்தது.அந்த விஷயத்தில் திண்டுக்கல்
தனபாலன் அவர்களுக்கும் எனக்கும்
ஒரு மறைமுகப் போட்டியே இருக்கும்

நிறைய புதிய பதிவருக்கு முதலில் பின்னூட்டமிட்டதும்
நல்ல பதிவர்களின் பதிவுகளை விடாது
முழுவதும்  படித்து சுருக்கமாக எனினும்
நேர்மையாகப் பாராட்டி எழுதியதும் ,
கூடுமானவரையில் மாற்றுக் கருத்து
என்றாலும் நாசூக்காக எதிர்ப்பைப் பதிவு செய்ததும்
நிறையப் பதிவர்கள் இணைவதற்கும்
தொடர்வதற்கும் காரணம் என நினைக்கிறேன்

இன்று ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் என்
வலைத் தளத்தில் இணைந்ததுடன்
113 நாடுகளைச் சார்ந்தவர்கள் என்
வலைத் தளத்தைப் பார்வையிடுகிறார்கள் என்பது
பெருமையாக மட்டும் இல்லை
கொஞ்சம் கூடுதல் பொறுப்போடு
எழுத வேண்டும்என்றும்,
எழுதவும் வேண்டும் எனவும் தோன்றுகிறது

என் மனம் கவர்ந்த பதிவர்களின் எழுத்துக்களை
(இப்போது அதிகம் எழுதா விட்டாலும் முன்பு
எழுதியதை )தொடர்ந்து படிக்கத் துவங்கி இருக்கிறேன்
அந்தப் பதிவர்கள் பட்டியல் குறைந்த பட்சம்
 ஐம்பதுக்கும்  குறையாமல் இருக்கும்

நிறையப் பதிவர்கள் எழுதவில்லை என
ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்காமல் முன்பு
சிறப்பாக எழுதியவர்களின் பதிவுகளைப் படித்து
பின்னூட்டமிடுவது அவர்களே அவர்களது
எழுத்துத் திறமையை உணரவும், அவர்கள் எழுதாது
இருப்பது பதிவுலகிற்கு ஒரு இழப்புதான் என்பதை
அவர்களே உணரவும் செய்து விட்டால்
பதிவுலகு மீண்டும் புதுப்பொலிவுறும் என்பது
எனது நம்பிக்கை

வாழ்க்கை என்பதே நம்பிக்கை தானே
நம்பிக்கைக்கு மறுபெயர்தானே வாழ்க்கை என்பதே

வாழ்த்துக்களுடன்....

16 comments:

  1. தங்களது எழுத்து என்னை மென்மேலும் எழுத ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அமைதியாகச் சாதனை படைத்துவரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உண்மைதான் அய்யா! எனக்கும் தங்களின் பதிவுகள் உத்வேகாமாக இருக்கும். தொடரும் சாதனைக்கு வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  3. தாங்கள் ஒரு முறை பதிவிட்ட பதிவின் பாதிப்பில் கரம் மசாலா என ஒரு பதிவே எழுதியிருக்கிறேன்,அது போலான
    பதிவு தங்களிடமிருந்து திரும்பவும் ஒரு முறை வரும் என எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. இன்று என் 'ஜோக்காளி'வலைப்பூவின் வாசக பார்வைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொட்டு இருப்பதற்கும் ,தமிழ் மண தர வரிசையில் முதலிடம் பெற்றதற்கும் ,நீங்கள் தொடர்ந்து தந்த ஊக்கமே காரணம் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் !

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    தாங்கள் சொல்வது உண்மைதான் தங்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் படிக்கும் வாசகன் நான் அந்தவகையில் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் எங்களை எழுத தூண்டுகிறது... தற்போது வலையுலகம் கொஞ்சம் மந்தமாக போகிறது எழுதிய அனைவரும் எழுத வேண்டும்.. இதுதான் ஆசை த.ம 4
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நதி நீராய் ஓடுதடி.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. //நிறையப் பதிவர்கள் எழுதவில்லை என
    ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்காமல் முன்பு
    சிறப்பாக எழுதியவர்களின் பதிவுகளைப் படித்து
    பின்னூட்டமிடுவது அவர்களே அவர்களது
    எழுத்துத் திறமையை உணரவும், அவர்கள் எழுதாது இருப்பது பதிவுலகிற்கு ஒரு இழப்புதான் என்பதை அவர்களே உணரவும் செய்து விட்டால்
    பதிவுலகு மீண்டும் புதுப்பொலிவுறும் என்பது
    எனது நம்பிக்கை//

    பாராட்டப்பட வேண்டிய யோசனை. நல்லதொரு நம்பிக்கையளிக்கும் ஆலோசனை. பாராட்டுகள்.

    ReplyDelete
  7. நம் பதிவுகளைப் பிறர் வாசிக்க வேண்டுமென்றால் பிறரது பதிவுகளை நாம் படித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நானும் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  8. //வாழ்க்கை என்பதே நம்பிக்கை தானே
    நம்பிக்கைக்கு மறுபெயர்தானே வாழ்க்கை என்பதே//

    சரியான கருத்து. தொடர்ந்து எழுத உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகமும் காரணம்....

    ReplyDelete
  9. நல்கருத்துக்கள்

    ReplyDelete
  10. நல்கருத்துக்கள்

    ReplyDelete
  11. வலைக்கு நான் வந்த புதிதில், நீங்கள் தொடர்ந்து பின்னூட்டங்கள் தந்து ,எனக்கு ஊக்கம் தந்த, அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  12. வலை உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாகவே விளங்குகிறது
    தொடர்ந்து இணைந்திருப்போம் ஐயா
    800பதிவுகள்நிறைவுற்றமைக்கு வாழ்த்துக்கள்
    தங்களின் எழுத்துலகப் பயணம் தொடரட்டும்
    தம+1

    ReplyDelete
  13. தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என்னை ஊக்கப்படித்தி இருக்கிறீர்கள். உங்களைப் போன்றோரினால் தான் ஊற்சாகமாக பதிவிடுகிறோம் ஐயா. 800 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
    தம +1

    ReplyDelete
  14. 800 பதிவுகளுக்கு நல்வாழ்த்துகள்!

    தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்து வித்தியாசமானது. இதனால், விட்டவர்கள் மீண்டும் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  15. உங்கள் சத்தான கருத்தூட்டலே மேலும் எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்து கொண்டிருக்கும்.

    ReplyDelete