Monday, March 21, 2016

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்


9 comments:

  1. உண்மையான வார்த்தைகள் வான் சிறப்பை உணராத சுரண்டலால்தான் வெள்ளத்தில் தவிப்பதும் வெயிலில் காய்வதும் தொடர்கிறது.

    ReplyDelete
  2. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் வாக்கை ஒட்டி அமைந்த,உலக தண்ணீர் தினச் சிறப்புச் சிந்தனை உங்கள் கவிதை.கவிஞருக்கு நன்றி.

    ReplyDelete
  3. //பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
    தி ண று ம் இயற்கையை-இனியும்
    கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
    குறைக்கப் பழகுவோம்//

    மனதில் பதியுமாறு மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  4. தெரிந்துக் கொண்டேன் இரகசியத்தை ஐயா.
    நன்றி.

    ReplyDelete
  5. நீர்பற்றிய அறியாமையே அதிகம் நீரை வீணாக்காமல் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்

    ReplyDelete
  6. உண்மையான விடயங்கள் கவிஞரே... அருமை

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    எல்லோரும் புரிந்து கொண்டால் சரி..ஐயா நாள் உணர்ந்து கவிதை புனைந்த விதம் சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

    ReplyDelete