Monday, May 16, 2016

தேர்தல்...... ஒரு மொய்க்கணக்கு

இருபது பேருக்கு ஒருவர் என்கிற கணக்கில்
பணம் பட்டுவாடாவை
கட்சிதமாய்
ஒரு கட்சி செய்தது
உலகிற்கே தெரிந்தது

பாவம் தேர்தல் கமிஷன்

கொடுப்பவனும் பெறுபவனும்
கூட்டணி வைத்திருக்கையில்
அது என்ன செய்ய இயலும் ?

வடிவேலுவை மிஞ்சும் வகையில்
மீம்ஸுக்கு தீனி கொடுத்த
"கேப்டன்"
கடைசி ஒருவாரம்
நார்மலாய் இருந்தது
ஆச்சரியமளித்தது

இது முதலில் இருந்து
இருந்திருக்குமானால்
இன்னும் சில தொகுதிகள் கிடைக்க
வாய்ப்பிருந்திருக்கும்.

தொண்டன் நிதானமிழக்கலாம்
தலைவன் நிதானம் இழப்பின்
தோல்வி நிச்சயம்

உலக அரசியல் பேசும் வை. கோ
அதை அறிந்திராதது
ம. ந. கூ, யின் துரதிஷ்டம்

நல்லவேளை
விவசாயிகளைக் கவர
தலையில் பச்சைத் துண்டு கட்டியவர்

இளைஞர்களைக் கவர
பர்முடாஸ் போடாதது
நம் அதிர்ஷ்டம்

சிம்லாச் சூழலில் தானிருந்து
ஊட்டிச் சூழலில்
வேட்பாளர்களை வைத்து
பாலையில் மக்களை வைத்து
" தாய்க்குத் தான் தெரியும் "
என வசனம் பேசியது
உட்சபட்சக் கொடூரம்

அப்படியும்
பெரும்பாலோர்  வாக்களித்திருக்கும்
தன்மையது புரிந்துத்  தெளிய
ஒரு திறந்த மனம் வேண்டும்

இனியேனும்
உப்பரிகையிலிருந்து
வீதி அளத்தல் விட  வேண்டும்

தோழர்கள் இனியெனும்
பிறர் முதுகு தேடி
காத்திருக்கும் நேரத்தில்
கொஞ்சம்
நடைப்பயிற்சிப் போய்
கால்களுக்கு
வலுவேற்ற முயற்சிக்கலாம்

ஒரு வேட்டி காய
பத்து நிமிடம் எனில்
பத்து வேட்டி காய
நூறு நிமிடமென்னும்
சதவீதக் கணக்கை நம்பும்
முட்டாள்தனைத்தை இனியேனும்
விட்டுத் தொலைக்கலாம்

புத்திசாலித்தனான
கூடுதல் செலவிலான
விளம்பர யுக்திகளுக்கோ

அவர்கள்  மீது கொண்ட
அவர்கள்  சொன்ன
சலுகைகள் மீது கொண்ட
ஈர்ப்பினாலோ அவர் களுக்கு
அதிக ஆதரவென்பதில்லை

எல்லாம்
மனக் கசப்பில் மாறி விழுந்தவை
என்பதை மட்டும் மறவாதிருந்தால்
உதய சூரியனின்
வெற்றிப் பயணம் தொடரும்

இல்லையேல்
அடுத்ததுஅவர்களும்
"அஸ்தமனத்தைச் சந்திப்பதைத் தவிர
வேறு வழி இல்லை


(பெரிய கவர்களை பிரித்து
எண்ணி இருக்கிறேன். சிறு கவர்களை
இனி பிரிக்க உத்தேசம்
உங்கள் மொய்க்கணக்கையும் பதியலாமே
ஆவலுடன் எதிர்பார்த்து )

13 comments:

  1. January 14, 2017 Tamil New Year Day ?

    ReplyDelete
  2. தஞ்சாவூரில் தள்ளிவைத்துவிட்டதால் அனைத்தும் கொஞ்சம் தாமதமாகும்.

    ReplyDelete
  3. வேட்டிக் கணக்கு நல்ல உவமை. முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்கள் சொல்வதைப்போல, தள்ளி வைத்த அரவாக் குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தேர்தல்களை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கையும் தள்ளிப் போகலாம். இடையில் எதுவும் நடக்கலாம்.

    ReplyDelete
  4. மக்கள் முட்டாளாக காத்திருக்கையில் அரசியல்வாதிகளை சொல்லி என்ன பயன்? தலை முறை தலைமுறையாய் இந்த கட்சிக்குதான் ஓட்டு என்று சொல்பவர்களையும் காசுக்கு விற்பவர்களையும் மாற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை! ஆட்சி மாறினாலும் காட்சிகள் அதேதான்!

    ReplyDelete
  5. தேர்வு செய்ய இயலாத நிலையில் கட்சிகள் இருக்கும் கொள்ளியில் நல்ல கொள்ளியா 19-ம் தேதிவரை காத்திருக்க வேண்டாமா

    ReplyDelete
  6. மாற்றி மாற்றி வாக்களித்தாலும் மாற்றம் வந்தபாடில்லை

    ReplyDelete
  7. மாற்றி மாற்றி வாக்களித்தாலும் மாற்றம் வந்தபாடில்லை

    ReplyDelete
  8. விடை வரும் நாட்களில் தெரிந்துவிடும்))) கவிதை ரசித்தேன்!

    ReplyDelete
  9. அரசியல் கட்சிகள் மக்களை ஊழலுக்கு கூட்டு சேர்த்துக் கொண்டன. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுவிட்டு அரசியல்வாதிகளை குறை சொல்ல d மக்களுக்கு உரிமையில்லை.
    தமிழ்நாட்டின் வளங்களெல்லாம் கண்டெய்னரில் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது.
    மக்கள் இலவசங்களிலும் , ஓட்டுக்கு கிடைத்த ஆயிரம் இரண்டாயிரத்திலும் எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.

    ReplyDelete
  10. மொய்க்கணக்கு..... நாளை தெரிந்துவிடும்.... காத்திருக்கிறேன்.

    ReplyDelete