Tuesday, May 17, 2016

ஓட்டுக்காக வாக்களித்து ஒய்யாரமாய் பதவியேற்கும்.....

மெல்லப் பணிவாய் நுழைந்து
பின் மென்னியை பிடிக்கும்
சாகசப் பிசாஸை

குடல் கருக விட்டு
மெல்ல உடல் கருக வைக்கும்
மாய அரக்கனை

தவறென்ற மனச்சாட்சியை
மெல்ல மெல்ல நிறம்மாற்றும்
மாய மோகினியை

திரவமாய் உட்புகுந்து
நெருப்பாய் உருமாறும்
கொள்ளிவாய்ப் பிசாஸை

இலைஅகற்றி கிளைவெட்டி
"படிப்படியாச்" சாய்த்தலென்பது
கனவு விருந்து

வேரறுத்து வென்னீர் ஊற்றி
"உடன் "அடியோடழித்தலே
வீரிய மருந்து

நண்பனுக்காகத் துவங்கி
தனியாகக் குடிக்கும்
 "குடி " அடிமையாயினும்

ஓட்டுக்காக வாக்களித்து
ஒய்யாரமாய் பதவியேற்கும்
"எந்த " அரசாயினும்

மனதில் இதை ஏற்றலே
"உய்யும் " வழிமட்டுமல்ல
நிலைக்கும் வழியும் கூட

8 comments:

  1. இவர்கள்தான் அரசியலில் மின்ன முடியும்

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  3. //வேரறுத்து வென்னீர் ஊற்றி
    "உடன் "அடியோடழித்தலே
    வீரிய மருந்து//
    அருமை ரமணி சார். படிப்படி எல்லாம் வேலைக்காகாது

    ReplyDelete
  4. //வேரறுத்து வென்னீர் ஊற்றி
    "உடன் "அடியோடழித்தலே
    வீரிய மருந்து//
    அருமை ரமணி சார். படிப்படி எல்லாம் வேலைக்காகாது

    ReplyDelete