Sunday, June 19, 2016

வேறு எப்படிச் சொல்லலாம் ?

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

மதுரை நகருக்குள்
புதிதாகச் சந்தித்தவர்
ஊர் குறித்து விசாரிக்க
கிராமத்தின் பெயரையும்..

சென்னையில் நண்பர் விசாரிக்க
மதுரை எனவும்

பூனேயில் அறிமுகமானவர் விசாரிக்க
தமிழ் நாடு எனவும்

இதே கேள்வியை
அமெரிக்காவில் ஒருவர் விசாரிக்க
இந்தியா எனவும்...

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை  மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

இது ஒரு பிரச்சனை இல்லை

பின்னொரு  நாளில்
இதே கேள்வியை
"அங்கு " கேட்கையில்
என்ன சொல்வது ?

"உலகம் " என்பது
பொதுப்பெயராக இருப்பதால்
அது சரியாகப் படவில்லை

வேறு எப்படிச் சொல்லலாம் ?

9 comments:

  1. "அங்கு" இதைக் கேட்க மாட்டார்கள்! அவர்கள்தானே வந்து அழைத்துப் போகிறவர்கள்!

    :)))

    ReplyDelete
  2. அங்கு கேட்டால்.... அங்கே கேள்விகளே கிடையாது! அவர்களுக்கு எல்லாம் தெரியுமே!

    ReplyDelete
  3. அங்கு அழைத்து செல்பவர்கள் கேட்டால் நடுலோகத்தில் இருந்து வருகிறேன் என சொல்லலாம்.

    ReplyDelete
  4. இங்கிருந்து சென்றேன்...இப்போது திரும்பி வருகிறேன் என்று சொல்லலாம்

    ReplyDelete
  5. அங்கு எனப்படுவது எங்கு. எல்லாம் வெறும் அனுமானங்களே

    ReplyDelete
  6. அங்கு கேட்கும் பொழுது பூலோகம் என்று சொல்வோம்.
    தம +1

    ReplyDelete
  7. வித்தியாசமான ஆனால் யதார்த்தமான சிந்தனை. நன்றி.

    ReplyDelete