Sunday, June 5, 2016

"இறைவி "

"இது என்ன கேள்விப்படாத
தமிழ்ச் சொல்லாய் இருக்கிறதே ?
இதற்கு என்ன பொருள்  "
என்றான் என் நண்பன்

"இறைவன்" என்கிற சொல்லைக்
கேள்விபட்டிருக்கிறாய் இல்லையா
அதைப் போல்தான் இது " என்றேன்

" ஓ அப்படியா
இது இறைவன் என்கிறச் சொல்லுக்கு
எதிர்ச் சொல்லா ?" என்றான்

நான் மிரண்டு போனேன்

"அடப்பாவி
இறைவனுக்கு எதிர்ச் சொல்
சைத்தான்

இது  இணைச் சொல்
இறைவனுக்குப் பெண்பால்"
என்றேன்

ஆணுக்குக்குப் பெண்ணும்
கணவனுக்கு மனைவியும்
முதலாளிக்குத் தொழிலாளியும்
எதிர்ச்சொல்லனெவே
பயிற்றுவிக்கப் பட்டவர்களுக்கு
சட்டெனப் புரிவது கொஞ்சம் சிரமம்தான்

11 comments:


  1. இறைவி என்ற வார்த்தைக்கு உங்கள் பதிவின் மூலம்தான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  2. இறைவனே ஆணா பெண்ணா என்று தெரியாத்போது இது வேறயா

    ReplyDelete
    Replies
    1. இயற்க்கையோடு இசைந்ததே இறைவன்.

      இயற்க்கை தான் இறை.

      Delete
  3. ஆணுக்கு பெண் பால் ஆணி என்றும்

    பெண்ணுக்கு ஆண் பால் பெண்ணா என்றுமிருந்தால்

    இறைவன் என்பதன் பெண்பால் இறைவி எனக்கொள்ளலாம்.

    அதற்காக கலவரப் படாதீர்கள்.
    எப்படிச் சொன்னாலும்
    இறைவன் கோபித்துக் கொள்ளமாட்டார்.

    சுப்பு தாத்தா.



    ReplyDelete
  4. இறைவன் "ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா (means, or, otherwise) அலியுமல்லன்" என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். நம் கற்பனையின் தீவிரம்தான் இறைவனுக்கும் ஒரு குடும்பம், புராணம் இவைகளைப் படைத்தது.

    சுப்புத் தாத்தாவின் பின்னூட்டம் வயிற்றைக் கலக்க வைக்கிறது. என்ன ஒரு கலவரமான சிந்தனை.

    ReplyDelete
  5. இறைவன், இறைவி. இச்சொற்களை கோயில் உலா சென்றுவிட்டு வரும் பல கட்டுரைகளில் நான் பயன்படுத்திவருகிறேன்.

    ReplyDelete
  6. இறைவி என்பது பெண்பால் தெய்வத்தை குறிக்கும் சொல்(பார்வதி,துர்க்கா)

    ReplyDelete