Monday, June 6, 2016

வெள்ளத்தனைய.....

தெளிவடைந்தவர்கள்
யாரும்
அலட்டிக்கொள்வதில்லை
எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்

முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்

முதிர்ச்சியடைந்தவர்கள்
எவரும்
அகங்காரம் கொள்வதில்லை
 எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்

முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்

ஞானமடைந்தவர்கள்
எவரும்
மயக்கம் கொள்வதில்லை
எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு  அநித்தியமானது என்பதுவும்

அவர்கள் வரும் முன்பே  இருந்தது
அவர்கள் இல்லையெனினும்
இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப்  பார்க்கிறார்கள்

இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக
இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்

7 comments:

  1. சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. அருமையான கருத்தை அழகாக சொன்னீர்கள்! பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  3. உள்ளதை உள்ளபடிச் சொன்னீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete