Wednesday, July 13, 2016

ஆடி அமாவாசை ..மூதாதையர் வழிபாடு ஏன் ? இந்துக்களின் நம்பிக்கை


கிரகத்தின் சுழற்சிப் பொருத்து பகல் இரவு
நேரங்கள் மாறுபடுவதைப் போல

கிரகங்களுக் கிடையிலான தொடர்பு பொருத்து
அவைகளுக்கிடையே ஆன மாத  வருடங்களும்
மாறுபடுகின்றன

அந்த வகையில் பூமியின் ஒரு வருடமே
தேவர்களுக்கு (அதாவது தெய்வங்களுக்கு )
ஒரு நாளென்பது இந்துக்களின் நம்பிக்கை

அந்த வகையில் மார்கழி மாதமே தேவர்களுக்கு
அதிகாலை( அதனால்தான் கோவில்களில்
திருப் பள்ளியெழுச்சிப் பூசைகள் )

தை முதல் வருகிற ஆறு மாதம் பகல் பொழுது

ஆடி மாதம் முதல் தொடர்கிற ஆறு மாதம்
அவர்களுக்கு இரவுப் பொழுது

அனைவருக்கும் புரிகிறார்போல உதாரணம் எனில்
இப்படிச் சொல்லலாம்

மாவட்ட ஆட்சித் தலைவரே ஆனாலும்கூட
பகலெல்லாம் பணியாற்றி விட்டு இரவு
ஓய்வெடுக்கையில் அலுவலகத்தில்
இருக்க் மாட்டார்.ஆனாலும் கூட
மாவட்டப் பொறுப்பு அவர்வசம்தான் இருக்கும்

அவர், தான் அலுவலகத்தில் இல்லாத
காலங்களிலும் தன் சார்பாக எந்தத்
தகவலைப் பெறவும் ஒரு  பொறுப்பான
காரியஸ்தரை நியமனம் செய்து வைத்திருப்பார்

மிக மிக அவசரம் எனில் அந்தப் பொறுப்பாளர்
தகவலை உடன் ஆட்சித் தலைவருக்கு
தெரிவிப்பார். அல்லது அவ்வளவு அவசரம்
இல்லையெனில் தகவல்களைப் பதிவு
செய்து வைத்திருப்பார்.

அதைப் போலவே ஓய்வ்டுக்கச் சொல்லும்
தெய்வங்கள் தங்கள் சார்பாக உலகைக் கவனித்துக்
கொள்ளும் பொறுப்பாளர்களாக மூதாதையரை
நியமித்துச் செல்வதாகவும்...

அவர்களை
வரவேற்று உபசரித்து தங்கள் குடும்பங்களைக்
காக்குமாறு வேண்டிக் கொள்ளும் நாளே
ஆடி அமாவாசையாகும்

அவ்வாறு இங்கு வந்திருந்து தங்களை
ஆறு மாதம் காத்து இருந்தவர்களுக்கு
நன்றி சொல்லி அனுப்பி வைக்கும் நாளே
தை அமாவாசையாகும்

இந்த ஆழமான நம்பிக்கையின் பொருட்டே
இந்துக்கள் ஆடி அமாவாசையை
மற்றும் தை அமாவாசையை

தங்கள் மூதாதையருக்கு உரிய நாளாக ஒதுக்கி
சிறப்புப்பூசைகளும் படையல்களும்
படைக்கிறார்கள்

படைப்பது சரி.அதற்கு எதற்கு நீர் நிலைக்குப்
போகவேண்டும். அதையும் கோவிலில்
செய்யலாமே ?

செய்யலாம் தான். ஆனால் அதற்கும் ஒரு
காரணமிருக்கிறது.........

9 comments:

  1. இண்ட்ரஸ்டிங..

    எடுத்துக் காட்டிய எடுத்துக்காட்டும் வெகு பொருத்தம்.

    காரணமிருக்கிறது?... தொடர்வீர்கள் போலிருக்கு.

    ReplyDelete
  2. விளக்கம் நன்று காரணம் அறிய காத்திருக்கின்றேன் கவிஞரே....

    ReplyDelete
  3. எது எதற்கோ.. காரணகாரியம் இருக்கும்போது.. அ ஆடிக்கும் தைக்கும் அம்மா வசையாக இருந்துட்டு போகட்டும் அய்யா....

    ReplyDelete
  4. ஆன்மிக தகவல்களை அற்புதமாக தந்துள்ளீர்கள் அய்யா!
    த ம 4

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு, அப்படி என்ன காரணம். சீக்கிரம் சொல்லுங்களேன்.

    கோ

    ReplyDelete
  6. சீக்கிரம் முடிச்ச அவுருங்கள் அய்யா

    ReplyDelete
  7. சீக்கிரம் முடிச்ச அவுருங்கள் அய்யா

    ReplyDelete
  8. சீக்கிரம் முடிச்ச அவுருங்கள் அய்யா

    ReplyDelete