Wednesday, July 6, 2016

விஸ்வ ரூபம் சுயமே

"குட்டையானவனின் "
சிரமம் கருதி
சிரமமாயினும்
"குனிந்தே " நடைப்  பயில்கிறேன்

"குட்டையானவன் "மட்டுமல்ல
கடந்துச்  செல்வோரும்
என்னைக்
"கூனனாகவே "மதிப்பீடு செய்கிறார்கள்

"நெட்டையானவனின்"
மதிப்புக் கருதி
சிரமமாயினும்
"உயரம் கூட்டிச்  "
"சமமாகவே "நடைப் பயில்கிறேன்

"உயரமானவன் "மட்டுமல்ல
உடன் கடப்போரும்
என்னை
"பெருமை விரும்பியாய்"
மதிப்பீடுச்  செய்கிறார்கள்

எரிச்சலுற்று நான்
"இயல்பாய் "இருக்கத் துவங்குகிறேன்

குட்டையானவன்
ஏனோ வியந்து
நிமிர்ந்துப் பார்க்கிறான்

நெட்டையானவன்
ஏனோ இயல்பாய்
உடன் நடக்கிறான்

சுயத்தின் சுகமறிய
சுயத்தின் பலமறிய
இப்போதெல்லாம்
நான் என்னைக்
கூட்டிக் குறைப்பதில்லை

சுயமே விஸ்வரூபம்
விஸ்வரூபம் சுயமே
எனப் புரிந்ததால்
இப்போதெல்லாம்
"வெளிமதிப்புப் "பொறுத்து
என் சிந்தனையைத் தொடர்வதில்லை  

6 comments:

  1. நம்மை நாமறியாமல் யாரறிவார். சுயத்தை வீட்டுக் கொடுக்காதிருத்தல் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டே திரும்பினேன். "வீட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் வீட்டுக் கொடுப்பதில்லை" என்றது ஒரு ஜவுளிக்கடைச் சுவர். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எதையோ ஒன்றை உபயோகிக்க வேண்டியதுதான்!

    :))

    ReplyDelete
  2. சிந்தனையை ரசித்தேன் கவிஞரே
    த.ம. 3

    ReplyDelete
  3. நம்மை நாம் அறிந்தால் தான் கவிஞர் சொன்ன "வெளி மதிப்பு" நம்மை பாதிக்காது.சீரிய சிந்தனை கவிஞரே! வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. ரசித்தேன்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு வாழ்த்துகள்

    ReplyDelete