Thursday, July 7, 2016

அழகின் அலகு

மழை அழகு
மழைக்கால மழை
இன்னும் அழகு

ஆயினும்
கோடைக் கால மழையே
அழகிலும்  கூடுதல் அழகு

நட்பு அழகு
இளமைக்கால நட்பு
இன்னும் அழகு

ஆயினும்
சோதனையில் தொடரும் நட்பே
அழகிலும் கூடுதல் அழகு

கவிதை அழகு
புரிகிறக் கவிதை
இன்னும் அழகு

ஆயினும்
பயன்தரும்  கவிதையே
அழகிலும் கூடுதல் அழகு

அழகே அழகு
பருவ அழகு
இன்னும் அழகு

ஆயினும்
முதிர்ச்சியில் மிளிரும் அழகே
அழகிற்கெல்லாம் கூடுதல் அழகு

ஏனெனில்
அழகு அழகுபெறுவது
அழகினால் மட்டுமாயினும்

அழகு சிறப்புப் பெறுவது
நிச்சயம் அது தரும்
பயன்பொறுத்துத்  தானே


8 comments:

  1. உங்கள் கவிதையும் வெகு அழகு.

    த.ம. +1

    ReplyDelete
  2. அழகிய கவிதை ரசித்தேன் கவிஞரே
    த.ம.4

    ReplyDelete
  3. கவிதைக்கு பொய் அழகு .....!

    ReplyDelete
  4. அனைத்தும்
    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. உங்கள் மனதின் தேடுதல் அழகின் அழகு. !

    ReplyDelete