Thursday, August 18, 2016

"லயம் "என்கும் சாத்திரம்.....

 நோக்கம் விட்டு
விலகாத
எண்ணங்களும் 
அதை மிகச் சரியாகத்
தாங்கும்படியான
வாக்கியங்களும்
அதனுள் மிகச் சரியாய்ப் 
பொருந்துபடியான
வார்த்தைகளும்
சூழல் பொருத்துப் 
பொருத்தமான தொனியும்
அறிந்து பேசுவதுப் 
பேச்சுக் கலை எனில்...

தொனி,
வார்த்தை,
வாக்கியம்
எண்ணம் கடந்து
மிகச் சரியாய்
பேசுவோனின்
நோக்கமறியத் தெரிதலே
கேட்கும் கலை

அனுபவம் விட்டு விலகாத
உணர்வும்
உணர்வினைப் புரிந்துப்
பொருந்திக் கொள்ளும்
வடிவமும்
வடிவம் பொருத்து
வளைந்து கொள்ளும் 
வார்த்தைகளையும்
மிகச் சரியாய்த் 
தேர்ந்தெடுக்கத் தெரிதலே
லாவகமாய்
கோர்க்கத் தெரிதலே
படைப்பின் இலக்கணம் எனில்...

லாவகம்
வார்த்தை
வடிவம்
உணர்வு கடந்து
மிகச் சரியாய்ப் 
படைப்பினில்  ஊடாடும்
அனுபவத்தை அனுபவிக்கத் தெரிதலே
 இரசனைக்  கலை 

துவங்கியப்  புள்ளியில்
வளைந்தக்  கோடு
இணைகையில்தால் 
வட்டம்  என்கும்  கணிதச்   சூத்திரம்

இருவர் உணர்வுகளும்
உச்சமாகி
ஒரு நொடியில் இணைவதையே  
"லயம் "என்கும்  உடற்  சாத்திரம்

ஆம்
படைப்பவன் இரசிப்பவன்
இருவரின் அனுபவச்  சங்கமிப்பே
சிறந்தப்  படைப்பாகவும் சாத்தியம்

      

6 comments:

  1. அனுபவம் விட்டு விலகாத
    உணர்வும்
    உணர்வினைப் புரிந்துப்
    பொருந்திக் கொள்ளும்
    வடிவமும்
    வடிவம் பொருத்து
    வளைந்து கொள்ளும்
    வார்த்தைகளையும்
    மிகச் சரியாய்த்
    தேர்ந்தடுக்கத் தெரிந்தவர்தான் தாங்கள்

    ReplyDelete
  2. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஏன் முடித்து விட்டீர்கள்?..

    இன்னும் இன்னும் இதுபற்றி எழுதிக் கொண்டே போகலாமோ என்று தோன்றுகிறது..

    ReplyDelete
  4. பலநேரங்களில் படைத்தவனின் எண்ணங்கள் சரியாப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. யாரோ லயம் மாறுகிறார்கள்

    ReplyDelete
  5. நல்லதொரு படைப்பு!!! லயம் புரிந்தது!

    ReplyDelete
  6. அருமையான விளக்கம் ஐயா.

    ReplyDelete