வரவிருப்பதால்
செலவு செய்தும்
செலவு இருப்பதால்
தினம் உழைத்தும்
வாழுவோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி ?
காரியமாற்றுதலால்
புகழடைந்தும்
புகழடைந்ததால்
காரியமாற்றியும்
திரிவோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி?
சிந்திப்பதால்
எழுதுபவராகவும்
எழுதுவதால்
சிந்திப்பவராகவும்
திகழ்வோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பலசமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த வகையில் சேர்த்தி ?
உயர்வுக்குப்
போராடுபவராகவும்
போராடுவதால்
உயர்ந்தோராகவும்
சிறந்தோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த அணியில் சேர்த்தி ?
சாவதற்காக
தினம் வாழ்ந்தும்
வாழ்வதற்காக
தினம் செத்தும்
இருப்போர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தக் கணக்கில் சேர்த்தி ?
செலவு செய்தும்
செலவு இருப்பதால்
தினம் உழைத்தும்
வாழுவோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி ?
காரியமாற்றுதலால்
புகழடைந்தும்
புகழடைந்ததால்
காரியமாற்றியும்
திரிவோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி?
சிந்திப்பதால்
எழுதுபவராகவும்
எழுதுவதால்
சிந்திப்பவராகவும்
திகழ்வோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பலசமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த வகையில் சேர்த்தி ?
உயர்வுக்குப்
போராடுபவராகவும்
போராடுவதால்
உயர்ந்தோராகவும்
சிறந்தோர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த அணியில் சேர்த்தி ?
சாவதற்காக
தினம் வாழ்ந்தும்
வாழ்வதற்காக
தினம் செத்தும்
இருப்போர் மத்தியில்
சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தக் கணக்கில் சேர்த்தி ?
நடுத்தரத்தில் சேர்த்தி எனலாம்.
ReplyDeleteகுழப்பவாதிகள்...?!
ReplyDelete//சில சமயம் இரண்டுமாகவும் பல சமயம் இரண்டு மற்றும் இருக்கும் இவர்கள் எந்தவகையில் சேர்த்தி ?// என பல்வேறு உதாரணங்களுடன் சொல்லி என்னைப்போன்ற ’நடுத்தரம் என்னும் இரண்டும் கெட்டான்’களின் நிலையினைப் பின்னிப் பெடலெடுத்து கவிதைபோல அழகாக எழுதி அசத்தியுள்ளார்கள்.
ReplyDeleteபாராட்டுகள். வாழ்த்துகள். பகிவுக்கு நன்றிகள்.
ஓ இவர்கள்தான் நடுத்தர வாதிகளா
ReplyDeleteநடுத்தரம் இரண்டான்கெட்டான்தான் ஐயா
ReplyDeleteஎந்த விதம்.... புரியாத ரகம்.
ReplyDeleteகுழப்பம்? எப்படிப்பட்டது என்று புரியாத ஒரு குழப்பம்...ரெண்டாங்கெட்டான் எனலாமோ??!!!
ReplyDelete