சந்தாக் கட்டி சண்டை போடும்
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு
சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு
சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்
ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே
ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி
கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி
வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்
நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே
உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை
உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை
இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்
உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்
( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு
சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு
சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்
ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே
ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி
கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி
வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்
நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே
உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை
உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை
இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்
உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்
( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )
மிகவும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteஉலக அரிமா இயக்கத்திற்கும், அதிலுள்ள உங்களைப்போன்ற உண்மை அரிமாக்களுக்கும் நூற்றாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅரிமாசங்கம் மேலும் பல சேவைகள் ஆற்றிட தழைத்து ஓங்கிட வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் ஜி...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteரசித்தேன், கவிதையை. வாழ்த்துகள்.
ReplyDeleteதிருச்சியில் இருந்தபோது என் மனைவிஅரிமாசங்கச் செயலாளராக இருந்தார் மெம்பர்கள் தங்கள் பிசினெசுக்கு இக்கூடலை உபயோகிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல்
ReplyDeleteG.M Balasubramaniam //
ReplyDeleteதொண்டும் தோழமையும் தான்
இதன் தாரக மந்திரம்
சிலர் நீங்கள் சொல்வது போல
தோழமையை பிஸினசுக்கும்
பயன்படுத்திக் கொள்வதுண்டு