Friday, February 10, 2017

பணிவிற்கு இலக்கணமாய் இருந்த ஓ.பி.எஸ் அவர்களை.....,

இன்று தமிழகம் காணும் அனைத்து
அவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும்
அனைத்து நிலைகளில் உள்ளவர்களிடமும்
பொறுப்பின்மையும் பொறுமை இன்மையும்
நிறைந்திருப்பதே முழுமையான காரணம்

பந்தியில் பரிமாறிக்கொண்டிருக்கும் போதே
அள்ளித் தின்னத் துவங்கும் பாமரனுக்கும்
காரியம் கைகூடிவரும் வேளை வரும்வரை
பொறுத்துக் கொள்ள முடியாத
தன்மையுடையவர்களுக்கும்
நிச்சயம் அதிக வித்தியாசமில்லை

தனித் தலைமைத் திறமும்,அசாத்தியத்
துணிச்சலும்,மக்கள் செல்வாக்குப் பலமும்
கொண்டிருந்த தலைவியை ஒரு இயக்கம்
இழக்கையில், ஒரு தடுமாற்றம்,சிறு தத்தளிப்பு
நேருதல் என்பது இயற்கையே

அதுவும் மிகச் சாதுர்யமாய்,அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்படியாக அடுத்த நிலைத்
தலைவர்கள் உருவாகிவிடக் கூடாது என
கங்கணங்கட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளைக்
கையாண்ட ஒரு இயக்கத்தில்
நிச்சயம் இது கூடுதல் சாத்தியமே

புரட்சித் தலவருக்குப் பின்
புரட்சித் தலைவரைப் போல் வெகு ஜனமக்களின்
பேராதரவைப் பெற்றவர்கள் அ.இ.அ.தி.க வில்
இல்லை.இப்போது பொறுப்பில் இருப்பவர்கள்
எல்லாம் ( மந்திரிகள் என்பதால்
தமிழகம் முழுமைக்கும் )
அந்த அந்த மாவட்ட அளவில்
அறியப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்

மாறாக இருமுறை முதல்வராக இருந்ததால்
மரியாதைக்குரிய ஓ.பி.ஸ் அவர்கள் மட்டும்
கட்சிக் கடந்து மாநிலம் முழுமைக்கும்
அறியப்பட்டவராக இருக்கிறார்.

(அறியப்பட்டவராகத்தான்.செல்வாக்கு உடையவராக
இல்லை என்பதுவும் உண்மை )

அதனால்தான்
அவர் மீண்டும் முதல்வராக முன்மொழியப்பட்டது
உறுத்தல் இல்லாத விஷயமாகப்பட்டது

அதனால்தான் எடப்பாடி அவர்களின் பெயர்
முதல்வர் பதவிக்கென முன்மொழியப்படுவதாக
தகவல் வர அது பொது ஜனங்களுக்கு அத்தனை
விருப்பமான விஷயமாகப்படவில்லை

அதைப் போலவே கட்சியின்
பொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்கள்
பதவி ஏற்றுக் கொள்ளுகையில்.
புரட்சித் தலைவியின் அரசியல் வாழ்வில் ,சரிவும்
களங்கமும், திருமதி சசிகலா அவர்களாலும்
அவர்களது குடும்பத்தாரினாலும்தான் ஏற்பட்டது
என்கிற எண்ணம் திண்ணமாக அனைவரிடத்தும்
இருந்ததால்,கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்
மற்றும் பொது ஜனங்கள் எல்லாம் அதை ஒரு
கசப்பான விஷயமாகவே கருதினார்கள்

ஆயினும் அது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்
என்கிற அளவில் விருப்பமில்லை என்றாலும்
பல்லைக் கடித்தபடி விழுங்கியும் தொலைத்தார்கள்

நிச்சயம் இந்த கசந்த உணவு
செரிக்கும்வரையாவது  கொஞ்சம் பொறுமையைக்
கையாண்டிருந்தால் நிச்சயம் இத்தனை
அவலங்கள் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை

மாறாக முதல்வராக பொறுப்பேற்ற மதிப்பிற்குரிய
ஓ.பி.எஸ் அவர்கள் அவரது முதல்வர் பொறுப்பில்
ஏற்பட்ட அசாதாரணமான சூழலை பொறுமையாய்
பொறுப்பாய் சமாளித்த விதம்...

அறியப்பட்டவராய் மட்டுமே இருந்தவர்
மதிக்கத் தக்கவராய், தன்னிகரற்ற தலைவராய்
மாறிவிடுவாரோ என ஏற்பட்ட அச்சமே

அவரை அசிங்கப்படுத்தும் விதமாக,அலட்சியப்
படுத்தி அவ்மானப்படுத்தும் விதமானச் செயல்களைச்
செய்யும்படியான  பிறழ்மன நிலையை திருமதி.
சசிகலா அவர்களுக்கு உண்டாக்கிவிட்டது

அந்த முதிர்ச்சியற்ற, தலைமைப்பண்பற்ற
அடாவடிச் செயல்களே

தன் பதவியின் மதிப்பு மறந்து காலில்விழுந்து
ஆசிப்பெற்ற பணிவிற்கு  இலக்கணமாய் இருந்த
ஓ.பி.எஸ் அவர்களை,தலை நிமிரச் செய்திருக்கிறது
சரி நிகராய் சமர் செய்யவும் செய்திருக்கிறது
என்றால் அது மிகை இல்லை

இது எப்படி முடியும் ? அல்லது
முடிய வேண்டும்

(அடுத்த பதிவில் )

9 comments:

  1. தொடர்கிறோம்..எப்படி முடியும்....முடியப்ப போகிறது???!!

    ReplyDelete
  2. //இது எப்படி முடியும்? அல்லது முடிய வேண்டும்
    (அடுத்த பதிவில் )//

    அடடா, மேதகு ஆளுனர் அவர்களின் முடிவினைப்போல இப்படி ஒத்தி வைத்து விட்டீர்களே !

    ReplyDelete
  3. அ இ அதிமு இப்போது ஹரிசாண்டலாக பிளவு பட்டுவிட்டது வெர்டிகலாக அல்ல தலைவர்கள் வெர்சஸ் தொண்டர்கள்

    ReplyDelete
  4. சிறப்பாக அலசியுள்ளீர்கள்
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  5. மக்கள் மன 'தில்" உள்ள 'தை" வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்லதே நடக்குமென நம்பிக்கை கொள்வோம்

    ReplyDelete
  6. மக்கள் மன 'தில்" உள்ள 'தை" வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்லதே நடக்குமென நம்பிக்கை கொள்வோம்

    ReplyDelete
  7. நல்லதே நடக்க வேண்டும். பார்க்கலாம்!

    ReplyDelete