Friday, February 10, 2017

திருமதி சசியும் பிரேக் இல்லா வண்டியும்

" பிரேக் " பிடிக்காத வண்டியில்
வீடு போகும் சூழ் நிலை நேரின்
மெதுவாகச் செல்லுதலே
புத்திசாலித்தனம்

மாறாக
விபத்து நேரும் முன்
வீடு செல்லவேண்டும் என
விரைந்து ஓட்டுபவன்
நிச்சயம்
வடிகட்டிய முட்டாளே

தீர்ப்பு
வெளியாக இருக்கிற சூழலில்
அதை எதிர்பார்த்துப்
பொறுத்திருத்தலே
புத்திசாலித்தனம்

மாறாக
தீர்ப்பு வரும் முன்
பதவியை அடைந்துவிடவேண்டும்
என வெறி கொள்பவரும்
நிச்சயம்
வடிகட்டிய முட்டாளே

முன்னதில்
விபத்து நேரவே
அதிக வாய்ப்பு

பின்னதில்
வெறுப்புக் கூடவே
அதிக வாய்ப்பு

போதனைகள்
போதை கொண்டவர்களிடம்
செல்லுபடியாவதில்லை
அனைவரும் அறிந்ததுதான்

இருப்பினும்
பதிவின் மூலம்
" நீர்த் " தெளித்து வைப்போம்

தெளிந்தால்
தெளியட்டும்

இல்லையேல்

இருப்பதையும் இழந்து
அடியோடு
ஒழிந்தால்
ஒழியட்டும்

12 comments:

  1. இதுவரை எந்த தலைவருக்குமே வாய்க்காத ஒரு அறிய வாய்ப்பு திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இதற்க்கு அவர் சசிகலா அவர்களுக்கு மானசீகமாக நன்றி செலுத்த வேண்டும்! மக்கள் எந்த அளவு சசிகலா குடும்பத்தை வெறுக்கிறார்கள் என்று அவர்கள் இன்னுமா தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்? போட்ட காசை எடுக்கவேண்டும் என்ற பதட்டத்தில் 'உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா' என்ற நிலைமை தான் எம் எல் ஏ க்களுக்கு!அதைத் தவிர சசிகலா அவர்களை ஆதரிப்பதற்கு வேறு காரணம் எதுவுமே தெரியவில்லை!

    எவ்வளவு சீக்கிரம் அவர்கள் ஓ பி எஸ் அவர்களை ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நல்லது, அவர்களுக்கு! நமக்கு? விடை தெரியாத கேள்வி!

    ReplyDelete
  2. //பதிவின் மூலம் " நீர்த் " தெளித்து வைப்போம்
    தெளிந்தால் தெளியட்டும் .. இல்லையேல் ..//

    அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பார்ப்போம்.

    ReplyDelete
  3. பதிவின் மூலம் நீர்த்தெளித்து விட்டீர்கள் காத்திருப்போம்...என்னா ஆகப் போகிறது என்று... சசிகலா ஆதரவாளர்கள் அனைவரும் எதற்காக என்றால் எல்லாம் பணத்திற்காகத்தான்...தமிழ்நாட்டின் நிலை இந்தளவிற்கு மோசமாகியிருக்கிறதே

    ReplyDelete
  4. நீர் அவர்கள் கண்ணுக்குத் தெரியவேண்டுமே

    ReplyDelete
  5. உண்மை நிலை சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரிந்திருப்பதுதான் சோகம்.

    ReplyDelete
  6. ஒருவழியாக பன்னீர் மூலமாக மறைமுக பிஜேபி ஆட்சி தமிழகத்தில் அமைய இருக்கிறது..

    ReplyDelete
  7. இனி பொறுப்பதி ('தில்' அர்த்த மி) ல்லை தோழா எறி தழல் கொண்டு வரு வோம்....

    ReplyDelete
  8. இனி பொறுப்பதி ('தில்' அர்த்த மி) ல்லை தோழா எறி தழல் கொண்டு வரு வோம்....

    ReplyDelete
  9. இன்றைய தீர்ப்பிற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது! தமிழகத்தினை ஒரு வழி செய்யாமல் இருக்க மாட்டார்கள் போலும்!

    ReplyDelete