Friday, May 12, 2017

இரசித்துப் பயணிப்போம் வா வா...

சங்கடங்களைச் சந்திக்க
 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவலையின்    மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் சாத்தியம்  இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவன் எவனோ
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன்

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதென எண்ணிச்   செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
 அடிப்படைச் சூத்திரம் 

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

இனி நடப்பதையும்
நடக்க இருப்பதையும் மட்டுமே
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா

14 comments:

  1. அருமை கவிஞரே நம்பிக்கையூட்டும் வரிகள்
    த.ம. 2

    ReplyDelete
  2. அருமை ஐயா
    அருமை
    இரசித்துப் பயணிப்போம்

    ReplyDelete
  3. அடிப்படைச் சூத்திரம் புரிந்தது ,சிகரம் தொட வெகு தூரமில்லை என்றும் தெரிகிறது :)

    ReplyDelete
  4. அருமை...ரசித்துப் பயணிப்போம்

    ReplyDelete
  5. வெற்றியும் சாதனையும்
    நாம் அடையும் இலக்கல்ல
    கடக்க ஒரு குறியீடு அவ்வளவே//

    சூப்பர் ! உண்மைதான். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. போராடத் துணிந்தவனுக்கே வாழ்க்கை சொந்தம் என்பதை அழகாக உணர்த்தியது கவிதை

    ReplyDelete
  7. //இனிய பயணமே வாழ்க்கை
    இரசித்துப் பயணிப்போம் வா வா//

    எளிமையாக, அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ///அடி ஆழம் செல்ல
    அச்சப்படுபவன்....

    சாதனை முத்தெடுக்கச்
    சத்தியமாய் சாத்தியம் இல்லை//

    உண்மையிலும் உண்மை.

    ReplyDelete
  9. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பதை விளக்கமாகச் சொன்னீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை.

    ReplyDelete
  10. அருமை. நல்லதோர் அறிவுரை.

    ReplyDelete
  11. இனிய பயணமே வாழ்க்கை
    இரசித்துப் பயணிப்போம் வா வா
    Mpika nanru

    ReplyDelete
  12. "ஒவ்வொரு நாளையும்
    புதிய நாளாகவே கொள்வதும்

    ஒவ்வொரு செயலையும்
    புதிதென எண்ணிச் செய்தலுமே

    தொடர்ந்து வெல்வதற்கான
    அடிப்படைச் சூத்திரம்" என்பதை
    ஏற்றுக்கொள்கின்றேன்!
    பின்பற்றுவோர் வெல்லலாம்!

    ReplyDelete
  13. கேள்விகள் கேள் . பதில் தெரியும் என்று எண்ணாமல் தேடு. அறிவாயுதத்தை உபயோகி வெற்றி வரலாம்

    ReplyDelete