Saturday, May 13, 2017

வான்மூலம்திசையறியும் மெய்ஞானம்

இளமைமுறுக்கில்
வெற்றிக் களிப்பில்

சீறும் அலைகளை
வெல்லும் முனைப்பில்

உடன் நீந்துவோரைத்
தாண்டும் வெறியினில்

மோகம் கொண்டவன்
வேகம் கொண்டவன்

தன்னையும் மறக்கிறான்
தன சுழலும்  மறக்கிறான்

வெற்றிகள் தந்த
வீறாப்புடன் வேகத்துடன்

அலைகள்அற்ற
 ஆழ்கடல் அடைய

முதன் முதலாய்
முற்றிலும் புதிதாய்

அதன் கொடிய அமைதி
சட்டென முச்சடைக்க

மெல்ல மெல்லச்
சமநிலை   கொள்கிறான்

அதுவரை

அவனுக்கு
வழிகாட்டிகளாய்
தெம்பூட்டிகளாய்

முன்னால்
நீந்திக் கொண்டிருந்தவர்கள்
பலரும் கண் காணாது  போயிருக்க

பதபதைத்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்படியாய்
பக்கம் பார்க்க

உடன் வந்தவர்களும்
குறைந்த எண்ணிகையில்
தொலைவில் எங்கோ  வர

அந்தக்கரைக்கானாக் கடல்
மெல்ல மெல்ல
அச்சம் கூட்டிப் போகிறது

அதுவரை
முன்பின் மட்டும்
பார்த்து நீந்தியவன்

கண்ணுக்குத்  தெரிவதே
துணையாகும் என
அதுவரை எண்ணியவன்

முதன் முதலாய்
வேறுவழியின்றி
முகம் திருப்பி

இதுவரை பாராத
வானம் பார்த்து
 நீந்தத் துவங்குகிறான்

மற்றதையெல்லாம்
முற்றாக
மறந்தபடி...

தன்னையும்
விண்ணையும் மட்டும்
உணர்ந்தபடி...

அது ஒன்றே
வழிகாட்டும்
என நம்பியபடி ....

வான்மூலம்திசையறியும்
மெய்ஞானத்தை
மெல்ல மெல்ல உணர்ந்தபடி



6 comments:

  1. //முதன் முதலாய் வேறுவழியின்றி முகம் திருப்பி//

    அனுபவப் பாடம் ..... அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  2. தான் மட்டும் தனியாவதே, தன்னை அறிதலின் ஆரம்பம்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
  3. உன்னை நீ உணர் என்று சாக்ரடிஸ் சொன்னது இப்போதான் புரிகிறது போலும் :)

    ReplyDelete
  4. தன்னையறிதல் நன்று
    த.ம. 2

    ReplyDelete
  5. ஆனால் பலரும் தன்னை அறிவதில் முனைப்பு காட்டாமல் பிறர் சொல் கேட்பதில் அடிமைகளாகவே இருக்கின்றனர்

    ReplyDelete
  6. ஆம்! நம்மை நாம் அறிதல் நன்று!

    ReplyDelete