Thursday, June 1, 2017

முயன்று அடைந்தே மகிழ்வோம்

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே


யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   ஆயினும்
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க

 சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே


முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு


மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்று  அடைந்தே மகிழ்வோம் 

16 comments:

  1. அருமை கவிஞரே உவமை நன்று
    த.ம

    ReplyDelete
  2. முயற்சியின் பெருமை. அருமை.

    ReplyDelete
  3. துளியும் முயலாமல் பொருமுவதைவிட சிறிதேனும் முயற்சி செய்து அது கிடைக்கலேன்னாலும் முயற்சித்தோம் என்ற மனத்திருப்தி கிடைக்கும் ஆதலால் முயல்வோம் வெற்றி கிட்டும்

    ReplyDelete
  4. // அது சமதளம் போலத்தானே //

    இந்த மனம் - பக்குவப்பட்ட மனம்...

    ReplyDelete
  5. //தொடர் முயற்சியில் வென்ற பல முட்டாள்கள் கூட உலகினில் உண்டு. மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//

    உண்மை தான்.

    //தொடர்ந்து நாளும் முயல்வோம். அரியவை எதையும் முயன்று அடைந்தே மகிழ்வோம் //

    அருமை.

    ReplyDelete
  6. உங்கள் வார்த்தைகளை நம்பி நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் ஐயா! எப்போது வெற்றி கிடைக்கும்?

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete
  7. அருமை. முயற்ச்சிதான் திருவினையாக்கும்

    ReplyDelete
  8. எதற்கென்று முனைவது சார்

    ReplyDelete
  9. G.M Balasubramaniam //

    அவரவர்களுக்கு எது இலக்காகத்
    தெரிகிறதோ அதை எனக் கொள்ளலாமே

    ReplyDelete
  10. Chellappa Yagyaswamy //

    அனைத்திலும் வென்றும்
    வென்றுகொண்டும்தானே இருக்கிறீர்கள்
    இன்னும் என்னக் குழப்பம்

    ReplyDelete
  11. KILLERGEE Devakottai //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஸ்ரீராம். //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Angelin //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தனிமரம் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete