Monday, June 12, 2017

இழந்த உறவுகளின் அருமைகளே....






பின்னிப் பிணைந்து
தொடருகிற உறவுகளைவிட
விலகியவிட
அறுந்த
பகையாகிப்போன
உறவுகளே
அன்றாடம் மனதில்
நிலைத்திருக்கிறது

தவறு அவர்களுடையதே ஆயினும்
சகித்திருக்கலாம்
பொறுத்திருக்கலாம்
எனும்படியாகவும்...

தவறு நம்முடையதாயின்
வருத்தம் தெரிவித்து இருக்கலாம்
மன்னிப்புக் கோரி இருக்கலாம்
எனும்படியாகவும்...

அதன் காரணமாகவே
இனியேனும்
தொடர்கிற உறவுகளில்
எதையும் தவறியும்
இழந்து விடக்கூடாதெனும்
உறுதி கொள்ளும்படியாகவும்..

இழந்த உறவுகளின்
அருமைகளே
பெருமைகளே
நினைவுகளே
எப்போதும் வழிகாட்டிப் போகிறது

அதன் காரணமாகவே
இப்போதெல்லாம்
இருக்கிற உறவுகளை விட
இழந்த உறவுகளே
எப்போதும் மனதில்
நீங்காது நிலைத்திருக்கிறது


11 comments:

  1. வழக்கம்போல "அங்கு" க்ளிக்காமல் மேலே க்ளிக் செய்தே தம வாங்கிட்டு விட்டேன்.

    இருப்பதை விட்டு இல்லாததற்கு ஏங்கும் மனிதமானமுமொரு காரணம். ஆனாலும் உறவுகளுடனான கலந்துரையாடலில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லதுதானே?

    ReplyDelete
  2. //இனியேனும் தொடர்கிற உறவுகளில் எதையும் தவறியும் இழந்து விடக்கூடாதெனும் உறுதி கொள்ளும்படியாகவும்.. இழந்த உறவுகளின்
    அருமைகளே பெருமைகளே நினைவுகளே
    எப்போதும் வழிகாட்டிப் போகிறது.//

    நான் மனதில் நினைத்துவரும், மிகப்பெரியதோர் உண்மையை, தங்கள் பாணியில் மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. பதிவிலிருந்து பதிவு அருமை
    த.ம.

    ReplyDelete
  4. அவசியமான பதிவு அய்யா ...
    அருமை

    ReplyDelete
  5. வணக்கம் ரமணி ஐயா.. இக்கவிதையைப் படிக்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பதிவொன்று உங்கள் கவிதைக்கு கருவாகிப்போனது நான் செய்த பாக்கியமே..!

    ஒரு குற்றவாளியின் வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கடைசியில் அவனை தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் வேளையில், அவன் திருந்தி, தன் குற்றங்களை உணர்ந்தவனாக மாறியிருப்பான்.

    அநேகமான மரண தண்டனைகள் குற்றவாளி திருந்திய பின்னரே வழங்கப்படுகிறது.

    உறவின் பிரிவும் அப்படித்தான். பிரிந்த பின்னர் சிலர் மிகவும் வருந்தி, மீண்டும் உறவு வராதா என ஏங்குகிறார்கள். எல்லோரும் அப்படி இல்லை என்றாலும், பிரிவின் பின்னர் அனைத்தையும் உணர்ந்து, மீண்டும் வாழ பலர் துடிப்பார்கள். அப்படியானவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  6. பதிவின் முடிவில் தமிழ்மண இணைப்பு தவறாக உள்ளது ஐயா... சரி செய்யவும்...

    ReplyDelete
  7. அருமையான கவிதை.
    உறவின் அருமை தெரிந்து பழகினால் என்றும் பிரிவு இல்லை.

    ReplyDelete
  8. இழந்த உறவுகளின்

    அனுபவத்தால்...

    இருக்கும் உறவுகளை

    மேம்படுத்தினால்...

    நலமே


    ...வார்த்தைகளும் , வரிகளும் அருமை..

    ReplyDelete
  9. "இழந்த உறவுகளின்
    அருமைகளே
    பெருமைகளே
    நினைவுகளே
    எப்போதும் வழிகாட்டிப் போகிறது" என்பதை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  10. யதார்த்தம்.

    எல்லோர் வாழ்க்கையில் கண்டிப்பாக இழந்த உறவுகள் இருக்கும். ஆனால் சிலரின் அருகே செல்ல முடிவதில்லை. எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் ஓரளவாவது இருந்தால் தான் உறவுகள் தொடரும்.

    ReplyDelete