Tuesday, June 13, 2017

கண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது ?.....

கண்ணன் திருவாய்த் திறக்க
அதில் உலகம் தெரிந்ததாய்
சிறுவயதில் கேட்டக் கதை
எனக்குச் சிரிப்பை
வரவழைத்ததுண்டு

பின்னர்
கல்லூரிக் காலங்களில்
கண்ணன் வாயில் பூமி என்றால்
கண்ணன் நின்றது எங்கே என்று
ஒரு பகுத்தறிவுவாதி சொல்ல அதை
மிகவும் இரசித்ததுண்டு

இப்போது
யசோதையினைப் போலவே

எனது கணினிவாய்த் திறந்து
அதன் மூலமே
உலகம் முழுவதையும்
மிக எளிதாய்க் கண்டு வருகிறேன்
உலகில் இருந்து கொண்டே

முன்னர் சிரித்ததையும்
பின்னர் இரசித்ததையும்
மெல்ல அசைபோட்டப்படி
அவைகளை
மறுபரிசீலனக்கு உட்படுத்தியபடி

8 comments:

  1. சிந்திக்க வைத்த கேள்வி அருமை கவிஞரே...
    த.ம.

    ReplyDelete
  2. அழகான சிந்திக்க வைக்கும் கேள்விதான் இது .... உலகம் அறியாத, அவன் புகழ் தெரியாத சிறு பருவத்தில் மட்டுமே.

    //எனது கணினிவாய்த் திறந்து
    அதன் மூலமே
    உலகம் முழுவதையும்
    மிக எளிதாய்க் கண்டு வருகிறேன்
    உலகில் இருந்து கொண்டே//

    சூப்பராகச் சொல்லியுள்ளீர்கள். சபாஷ் :)

    பூமி என்பது வேறு. பிரபஞ்சம் என்பது வேறு. பிரபஞ்சத்துடன் ஒப்பிடும்போது இந்த நம் பூமி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவு மட்டுமே.

    இந்த மாபெரும் பிரபஞ்சத்தையே உருவாக்கி ஆட்டிப்படைத்து அரசாண்டு வருபவனே அந்த கண்ணன் என்கிற பரமாத்மாவாகும்.

    ReplyDelete
  3. அதெல்லாம் காட்சிப்பிழை என்றோ கருத்துப்பிழை என்றோ உணரவில்லையா

    ReplyDelete
  4. ஆஹா அருமையா ஒப்பீடும் சிந்தனையும்..

    ReplyDelete
  5. சிந்திக்கவைக்கும் சிறப்புக்கவி. உண்மையில் இப்போது உலகம் வாயிலில் உருண்டை போலத்தான்.

    ReplyDelete
  6. உலகம் இப்போ நம் கையில்

    ReplyDelete